பள்ளியில் பாலியியல் தொல்லை: எம். எஸ். பாஸ்கர் கண்டனம்

2

பள்ளியில் நடக்கும் பாலியியல் தொல்லைக்கு நடிகர் எம். எஸ்.பாஸ்கர் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது:

இதற்கு முன்பு சென்னையில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு ஆசிரியரால் பாலியல் தொல்லை. மற்றுமொரு தனியார் பள்ளியில் சின்னஞ்சிறு மழலைகளை ஒரு ஆசிரியர் மிருகத்தனமாக தாக்கும் வீடியோ. தற்போது கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் அந்த மாணவி தாள முடியாத மன உளைச்சலால் தூக்கிட்டு தற்கொலை.

என்ன நடக்கிறது பள்ளிகளில்?

குழந்தைகள் படிப்பதா இல்லையா?

சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை விட செய்தே ஆக வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட கயவர்களுக்காக எந்த வழக்கறிஞரும் ஆஜராகக் கூடாது.

அந்த வக்கிரபுத்தி கொண்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டே ஆக வேண்டும். அதுவும் விரைவாக.
இதுவே என் வேண்டுகோள்.

இவ்வாறு எம்.எஸ்.பாஸ்கர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.