ஷகீலா (பட விமர்சனம்)

47

படம்: ஷகீலா
நடிப்பு: ரிச்சா சத்தா, பங்கஜ் திரிபாதி, எஸ்தர்

நொரான்கா, ராஜீவ் பிள்ளை, ஷீவா ரானா, கஜோல் சக் மற்றும் சந்தீப் மலானி
தயாரிப்பு: ஷம்மி நன்வானி, சரவண பிரசாத்
ஒளிப்பதிவு: சந்தோஷ் ராய்
இசை: வீர் சமர்த்-மீட் ப்ரோஸ்
இயக்கம்: இந்திரஜித் லங்கேஷ்
கவர்ச்சி நடிகை ஷகீலா எழுதிய வாழ்க்கை புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் ஷகீலா. உடன் பிறந்த 5 தங்கைகள் மற்றும் குடும்பத்தை காப்பாற்ற சினிமாவில் துணை நடிகையாக சேர்ந்து பின்னர் கவர்ச்சி நடிகை ஆகிறார் ஷகீலா. அவரது படங்களால் பெரிய நடிகர்களின் பட வசூல் பாத்திக்கிறது.கோபம் அடைந்த பெரிய நடிகர் ஒருவர் ஷகீலாவை திட்டமிட்டு பழி வாங்கி சினிமாவிலிருந்து எப்படி விரட்டியடிக்கிறார் என்பதை கதை.
பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா ஷகீலா வேடம் ஏற்று கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் நடித்திருக்கிறார். கட்டுமஸ்த்தான தேகத்தை வஞ்சமில்லாமல் கேமிரா கண்களுக்கும், இளவட்ட கண்களுக்கும் விருந்து படைக்கிறார். கவர்ச்சியாக நடிப்பது ஒருபக்கம் இருந்தாலும் பாடல் காட்சிகளில் அஓவர் கிளாமர்  காட்டி கண்களை கூச வைக்கிறார்.
ஷகீலாவை சினிமாவிலிருந்து விரட்டும் வில்லனாக மற்றொரு பிரபல நடிகர் கதாபாத்திரத்தில் பங்கஜ் திரிபாதி நடித்திருக்கிறார். அவரது சூழ்ச்சியான திட்டங்கள் எடுபடுகிறது.

ஷகீலா நடிக்கும்போது அவருக்கு பதிலாக கவர்ச்சியை காட்டு டூப் நடிகையாக வரும் எஸ்தர் இன்னும்  சூடேற்றுகிறார்.

படத்தை இயக்கி இருக்கும் இந்திரஜித் லங்கேஷ் கவர்ச்சி நடிகை வாழ்க்கை படத்தை ஆபாச படமாக்கி விடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார். பெண்களுக்கு மெசேஜ் சொல்லும் படமாக இருக்கும் என்று ஷகீலா ஒருமுறை கூறினார். ஆனால் என்ன மெசேஜ்?
இசையும் ஒளிப்பதிவும் படத்துக்கு பலமாக அமைந்திருக்கிறது.
ஷகீலா- பளிச்சிடும் கவர்ச்சி.

 

Leave A Reply

Your email address will not be published.