’காகித பூக்கள்’ சினிமா குழுவை ஊருக்குள் விட மறுத்த கிராம மக்கள்

எல்லாம் கொரோனா பயம்தான்.

16

கொரோனா காலமான இக்கால கட்டத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து படக் குழுவினர் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுத்து அவர்களுக்கு இல்லை என்ற மருத்துவ சான்றுடன் காகித பூக்கள் படக் குழுவினர் தயாராக இருந் தனர்.
ஸ்ரீ சக்திவேல் சினி கிரியே ஷன்ஸ் சார்பில் உருவாகும் இப்படக் குழுவினர் பொள் ளாச்சி அருகே உள்ள கிராமத் திற்குச் ஷூட்டிங்கிற்கு சென் றனர். ஆனால் அந்த கிராம மக்கள் படக் குழுவினரை ஊருக்குள் வரக்கூடாது என கட்டுப்பாடு விதித்து வர விடாமல் தடுத்து விட்டனர்.


எவ்வளவோ எடுத்து சொல்லி யும் அவர்கள் கேட்கவில்லை. மொத்த யூனிட்டையும் பொள் ளாச்சியில் தங்க வைத்துவிட்டு இயக்குனரும் தயாரிப்பாளரு மான முத்து மாணிக்கமும், தயாரிப்பு நிர்வாகியான சுப்ர மணியமும் திண்டுக்கல் அருகே உள்ள செம்பட்டி கிராமத்திற்கு சென்று அனுமதி பெற்று மொத்த யூனிட்டையும் அங்கு வர வழைத்து ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் முழு படப் பிடிப்பையும் நடத்தி முடித்தனர்.
முழு படப்பிடிப்பும் முடிவ டைந்து விட்ட “காகித பூக்கள் ” திரைப்படம் விரைவில் பெரிய திரையில் வர உள்ளது.
மேலும் படம் பற்றி கதை , திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்குனராக அறிமுகமாகும் முத்துமாணிக் கம் கூறியவதாவது:
ஒருவனின் காதலி இன்னொரு வனின் மனைவியாகலாம். அதே சமயம் ஒருவனின் மனைவி இன்னொருவனின் காதலியாக முடியாது. அப்படி ஆனால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை மாறுபட்ட கிளை மாஸுடன் சொல்லும் படம் தான் “காகித பூக்கள் ” இதில் புதுமுகங்கள் லோகன் – பிரிய தர்ஷினி இருவருடன் ப்ரவீண் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் தில்லை மணி, தவசி , பாலு, ரேகா சுரேஷ் இன்னும் பலர் நடிக் கின்றனர்.
இத்தோஷ் நந்தா இசையமைக் கிறார். சிவபாஸ்கர் ஒளிப் பதிவு செய்கிறார். சுதர்சன் படத் தொகுப்பு செய்கிறார். பாலசுப்ரமணியம் கலை. ஸ்ரீ சிவசங்கர் – ஸ்ரீ செல்வி நடன பயிற்சி அளிக்கின்றனர்.
திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப் பிடிப்பு நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.