ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து சண்முகம் இறுதி ஊர்வலம்: நாளை படப்பிடிப்பு ரத்து..
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு
ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து சண்முகம் இன்று மரணம் அடைந்தார், அவரது இறுதி ஊர்வலம் நாளை நடக்கிறது. இதையொட்டி நாளை படப்படிப்புகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி தமிழ் திரைப்பட தயாரிதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
40 வருடங்களுக்கும் மேலாக தமிழ் திரை உலகில் வலம் வந்தவரும், கலை இயக்குனர்கள் சங்கத்தின் தலைவரும், பெப்சியில் 3வது முறையாக செயலாளராக தேர்வாகி செயல்பட்டு வந்தவரும்.தான் பணிபுரிந்த தயாரிப்பாளர்களிடம் மட்டுமல்ல அனைத்து தயாரிப்பாளர்களிடமும் இன்முகத்துடன் பழகிவந்த அங்கமுத்துவின் மறைவு திரை உலகிற்கு பேரிழப்பாகும்.
நாளை 28.06.2021 அன்று அவரது இறுதி ஊர்வலமும் நல்லடக்கமும் நடைபெற இருப்பதால் அவருக்கு அஞ்சலி செலுத்திடும் வகையில் நாளை (28.06.2021) பெப்சியின் வேண்டுகோளுக்கிணங்க திங்கள்கிழமை சென்னையில் படப்பிடிப்புகள் நடைபெறாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்”.
இவ்வாறு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.