சித்தார்த்தின் ‘அவள்’ பேய் படம் 2-ம் பாகம்

16

தமிழில் எந்திரன், விஸ்வரூபம், பில்லா, சண்டகோழி, சாமி, அரண்மனை உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்தன. தற்போது இந்தியன் படத்தின் 2-ம் பாகம் தயாராகிறது.

சிங்கம் படத்தின் மூன்று பாகங்கள் வந்துள்ளன. குறிப்பாக பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளதால் அரண்மனை படத்தின் 3-ம் பாகமும் பிசாசு படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி வருகிறது.

இந்த நிலையில் ‘அவள்’ பேய் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. அவள் படத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா நடித்து இருந்தனர். மிலிந்த் ராவ் இயக்கினார். இந்த படம் 2017-ல் வெளியாகி பேய் பட ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

நல்ல வசூலும் பார்த்தது. தற்போது அவள் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை தயார் செய்து விட்டதாக மிலிந்த் ராவ் தெரிவித்து உள்ளார். 2-ம் பாகத்திலும் சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பார்கள் என்று தெரிகிறது.

Leave A Reply

Your email address will not be published.