படம்: சில நேரங்களில் சில மனிதர்கள்
நடிப்பு: அசோக் செல்வன். ரியா. மணிகண்டன். அபி ஹாசன், அஞ்சு குரியன், பிரவீன் ராஜா, ரித்விகா, நாசர், கே.எஸ்.ரவிகுமார், இளவரசு, பானுப்ரியா, அனுபாமா குமார்,
இசை: ரதன்
ஒளிப்பதிவு: மெய்யேந்திரன்.கே
தயாரிப்பு: ஏஆர் எண்டர்டெயின்மெண்ட், ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்
இயக்கம்: விஷால் வெங்கட்
வயது முதிர்ந்த தந்தை தன் மகன் திருமண பத்திரிகையை நண்பர் களுக்கு தரச் செல்கிறார். வீடு திரும்பும்போது கார் விபத்தில் சிக்கி பலியாகிறார். விபத்து செய்தவர் இதிலிருந்து தப்பிக்க முயல எதேச்சையாக அந்த பக்கம் வந்த இளம் நடிகர் மீது பழி விழுகிறது. தநதையை பறிகொடுத்த மகன் மனம் உடைந்து கண்ணீர் விட்டு கதறுகிறான் இதற்கிடையில் நடிகர்தான் இந்த விபத்தை நடத்தினார் என அவரை சமூக வலைதளத்தில் அவமானப் படுத்துகின்றனர். இந்நிலையில் உண்மை குற்றவாளியை போலீஸ் கண்டுபிடிக்கிறது. இறுதியில் நடப்பது என்ன என்பதற்கு வித்தி யாசமான பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்.
எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய நாவலின் டைட்டிலான சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற டைட்டில் இப்படத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறது.
மகன் அசோக்செல்வனின் தந்தை யாக எதர்த்தமான நடிப்பை வெளியிட்டிருக்கிறார் நாசர். இவர் மட்டுமல்ல படத்தில் நடித்திருக்கும் அசோக்செல்வன், அபி ஹாசன், மணிகண்டன் உள்ளிட்ட அனைவருமே எதார்த்தை வெளிப்படுத்தி இருப்பதுதான் படத்தை மனதுக்கு நெருக்கமாக கொண்டுவந்து நிறுத்துகிறது.
தன் பேச்சை கேட்காமல் த்னியாக சென்று விபத்தில் சிக்கி தந்தை இறந்துவிட்டாரே எனறு அசோக் செல்வன் சொல்லிச் சொல்லி அழும்போதெல்லாம் தந்தை மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது.
பஸ் ஸ்டாப்புக்கு டூ வீலரில் அழைத்துவந்து விடாததால்தான் நாசர் விபத்தில் சிக்கி இறந்து விட்டார் என்று மனதுக்குள் குற்ற உணர்வு ஏற்பட்டு நாசர் வீட்டில் அவரது உடலை எடுத்துச் செல்லும்வரை கண்ணீருடன் தவிக்கும் மணிகண்டன் நடிப்பில் மிளிர்கிறார்.
நாசர் மீது கார் ஏற்றி விபத்து நடத்தியதை முதலில் மறைக்க நினைத்தாலும் பின்னர் தவறை உணர்ந்து அசோக் செல்வன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் பிரவின், தந்தை கே எஸ் ரவிகுமாரை எடுத்தெறிந்து பேசிவிட்டு பின்னர் இறுதியில் தனது திமிர்தனத்தை விட்டுவிட்டு மன்னிப்பு கேட்கும் அபி ஹாசன், கணவர் விபத்து நடத்திவிட்டு அதை மறைக்க முயலும்போது அதற்கு இடம் தராமல் குற்றத்திலிருந்து நீண்ட நாள் தப்பிக்க முடியாது என்று கணவரை எச்சரிக்கும் ரித்விகா என ஒவ்வொரு பாத்திரமும் மனதில் இடம்பிடித்துக் கொள்கின்றன
கமர்ஷியல்தான் ஒர்கவுட் ஆகும் என்று சினிமா உலகமே திசை மாறிக்கொண்டிருக்கும்போது எதார்த்தமும் ஜெயிக்கும் என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் விஷால் வெங்கட்.
ரதன் இசை, மெய்யேந்திரன் ஒளிப்பதிவு இரண்டும் சமவிகிதத்தில்பங்களிப்பு செய்திருக்கின்றனர்.
சில நேரங்களில் சில மனிதர்கள்- மனங்களை கொள்ளையடிக்கும்.