டி.ராஜேந்தர் நலமே; சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்கிறோம்: சிம்பு அறிக்கை!

2

டிகரும் இயக்குநருமாக டி.ராஜேந்தருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக அவரை சிங்கப்பூர் அழைத்துச் செல்ல ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாயின.

இது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. அவர் விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நடிகர் சிம்பு இதுகுறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “எனது தந்தைக்குத் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் , அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம் . அங்கு பரிசோதனையில் , அவருக்கு வயிற்றில் சிறிய ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் , அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் , அவர் உடல் நலன் கருதியும் , உயர் சிகிச்சைக்காகவும் , தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன் , நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து , உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி” என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.