சிம்புவின் அசத்தல் ஈஸ்வரன் ட்ரெய்லர் ரிலீஸ்

ரசிகர்கள் அமோக வரவேற்பு

15

சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன்  சிம்பு நடித்திருக்கும் படம் ஈஸ்வரன். நிதிஅகர்வால் ஹீரோயின். எஸ்.தமன் இசை. இப்படம் பொங்கல் தினத்தில் ஜனவரி 14ம் தேதி திரைக்கு வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அதில் 3 பாடல்கள் திரையிடப்பட்டன. ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பில் அரங்கம் அதிர்ந்தது..

இப்படத்தின் அதிரடி   டிரெய்லர் இன்று  மாலை வெளியானது. முருகன் கோவிலில் சாமிகும்பிட்டு எல்லோரும் நல்லா இருக்கனும் என்று வேண்டிக்கொள்ளும் சிம்பு பின்னர் தனது அதிரடியை காட்டுகிறார்.

இந்த குடும்பத்தில் ஒரு உசுரையும் போகவிடமாட்டேன் என எதிரிகளை அடித்து துவம்சம் செய்யும் சிம்பு அழிக்கறதுக்கு அசுரன் வந்தா காக்கிறதுக்கு இந்த ஈஸ்வரன் வருவேன் என்று அசத்தல் ஸ்டைலில்  வசனம் பேசி அனல் பறக்கவிடுகிறார்..  பொங்கலுக்கு ரசிகர்களுக்கு அறுசுவை விருந்தாக ஈஸ்வரன் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

 

 

 

Eeswaran Trailer
#EeswaranPongal
#EeswaranFromJan14th @SilambarasanTR_ #susienthiran

Leave A Reply

Your email address will not be published.