சிம்பு நடிக்கும் ’ஈஸ்வரன்’ படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் நடந்து முடிந்தது 

பாம்பு பிடித்த விவகாரம் பற்றி சுசீந்திரன் விள்க்கம்

15

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ‘ஈஸ்வரன்’ படத்தின் இறுதிக்கட்டப் படப் பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வந்தது. மின்னல் வேகத்தில் நடந்த படப்பிடிப்பு தற்போது முற்றிலுமாக  நடந்து முடிந்திருக்கிறது.

ஊரடங்கு காலத்தில் சில இயக்குனர் களிடம் சிம்பு கதை கேட்டார். அதில் சுசீந்திரன் கதை பிடித் திருந்தது குடும்ப பாசம், கிராமத்து பின்னணி என எல்லா அம்சமும் கலந்த கதை யாக இருந்ததையடுத்து உடன டியாக நடிக்க ஒப்புக் கொண் டார்.  ஈஸ்வரன் என்ற டைட்டிலுடன் வெளியிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக்கில் சிம்பு நாக பாம்பு வைத்திருப்பதுபோல் போஸ் இடம் பெற்றிருந்தது.  இதுகுறித்து சமூக் ஆர்வலர் ஒருவர்  வன துறை அதிகாரியிடம் புகார் செய்தார். இதுகுறித்து சுசீந்திரன் அளித்துள்ள விளக்கத்தில் கூறியதாவது:

 

சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் சிம்பு பாம்பு பிடித்தது போன்ற காட்சி ஊடகத்தில் வெளி யானது. உண்மையில், அந்தக் காட்சி போலியான ப்ளாஸ்டிக் பாம்பு போன்ற ஒன்றை வைத்து படமாக்கினோம். அது படத்தில் நிஜ பாம்பு போன்று கிராபிக்ஸ் செய்யப்பட வுள்ளது. இந்தக் காட்சியைப் பற்றிய செய்தியையும், புகைப் படத்தையும் தயாரிப்பு நிறுவனம் சார்பாகவோ மற்ற வர்கள் மூலமாகவோ அதிகார பூர்வமாக வெளியிடப்பட வில்லை. கணினி கிராபிக்ஸ் செய்யும்போது இந்த வீடியோ சில நபர்களால் கசிந்துள்ளது. எங்கள் தரப்பிலிருந்து காட்சிகள் எவ்வாறு கசிந்தன என்பதை நாங்கள் அதைப் பற்றி விசாரித்து வருகின் றோம்


இது சம்பந்தமாக சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகார் தொடர்பாக, வனத்துறை அதிகாரி கிளமண்ட் எடிசன் எங்களை விசாரணைக்கு அழைத்தார், நாங்கள் விசார ணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து எங்கள் தரப்பு விளக் கத்தை தெளிவு படுத்தினோம். அதற்கு உண்டான ஆதாரங் களை விரைவில் சமர்ப்பிப் பதாக தெரிவித்துள்ளோம். படத்தின் முழு படப்பிடிப்பும் தமிழக அரசின் வழிகாட்டி தலைக் கடைப்பிடித்து நடை பெற்று வருகிறது. படம் சம்பந்தப்பட்ட செய்திகள், புகைப்படங் கள் அனைத்தும் ஊடகங்க ளுக்கு முறையாக அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு சுசீந்திரன் கூறினார்.

சிம்புவின் ஈஸ்வரன் படம் வரும் பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.