கோட்டை மாரியம்மன் கோவிலில் சிம்பு வழிபாடு

14

நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்ப்டிப்பு திண்டுக்கல்லில் நடக்கிறது.

இப்படத்தில் சிம்புவின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி ட்ரெண்டிங் ஆனது. அடர்ந்த நீண்ட  தாடியுடன் சிம்பு தோற்றமளிக்கும் படங்கள் நேற்று வெளியாகி வைரலானது.

திண்டுக்கல் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் சிம்பு அங்குள்ள கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு சென்று சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டார். அவர் வெளியில் வந்தபோது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களுக்கு வணக்கம் சொல்லிவிட்டு காரில் புறப்பட்டு சென்றார்.

Leave A Reply

Your email address will not be published.