சிம்புவின் “ஈஸ்வரன்” பொங்கல் விருந்து

10

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் பொங்கல் விருந்தாக திரைக்கு வரும் படம் ஈஸ்வரன். மாதவ் மீடியா மற்றும் டி கம்பெனி தயாரிக்கிறது. இந்த படம் குறித்து தயாரிப்பாளர்கள் கூறுகையில், ‘பொங்கலுக்கு வெளியாகும் ஈஸ்வரன் படம் தமிழ் சினிமாவின் முக்கியத்துவம் வாய்ந்த படமாக நிச்சயம் இருக்கும். அனைத்து தரப்பு மக்களின் ரசனைக்குரிய படமாக இது அமையும். குடும்பம் குடும்பமாக இந்த படத்தை பார்க்க நிச்சயம் விரும்புவார்கள். சிம்புவின் கதாபாத்திரம் அனைத்து தரப்பினரையும் கவரும்.

மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படத்தின்மூலம் முன்புபோலவே திரையரங்குகளில் இனி படங்கள் வெளியாகும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் பொங்கல் விருந்தாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஈஸ்வரன் படத்துக்கு சேலம் 7ஜி பிலிம் சிவா விநியோகஸ்தர் ஆவார். படத்தில் சிம்புவின் கலக்கலான தோற்றங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.