சிம்மராசி பட இயக்குனர் ஈரோடு சவுந்தர் இன்று காலமானார்..

16

சேரன் பாண்டியன் ‘ , ‘ நாட்டாமை ‘, ‘ பரம்பரை ‘, சமுத்திரம் ‘ போன்ற படங்களின் கதை வசனகர்த்தா ஈரோடு செளந்தர். பல படங்களில் நடித்தும் இருக்கிறார்.சரத்குமார் நடித்த சிம்ம ராசி மற்றும் முதல் சீதனம் படங்களை இயக்கியிருக்கிறார்.

இன்று ஈரோடு செளந்தர் அகால மரணமடைந்தார். தனது பேரனை கதாநாயகனாக நடிக்க வைத்து பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மனதில் காதல் புகுந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுத்தும் என்று சொல்கிற கதையாக ‘அய்யா..உள்ளோர் அய்யா..’ படத்தை இயக்கி வந்தார், ஈரோடு செளந்தர். வசனங்களில் வட்டார மொழி வழக்கில் வசனங்கள் எழுதுவதில் கைதேர்ந்தவர்.

Leave A Reply

Your email address will not be published.