சினம்கொள் (திரைப்பட விமர்சனம்)

72

படம்: சினம்கொள்

நடிப்பு: அரவிந்தன் சிவஞானம், நந்தினி டெரி, லீலாவதி, பிரேம், தீபச் செல்வன், , தனஞ்ஜெயன், பாலா, , மதுமிதா, பேபி  டென்சிகா,

இசை: என்.ஆர்.ரகுநந்தன்

ஒளிப்பதிவு: எம்.ஆர்.பழனிகுமார்

தயாரிப்பு: காயத்ரி ரஞ்சித், பாக்யலட்சுமி வெங்கடேஷ்.

இயக்கம்: ரஞ்சித் ஜோசப்

ரிலீஸ்:  Eelam play  (OTT)

இலங்கையில் நடந்த இறுதிப்போருக்கு பின் அங்குள்ள தமிழர்களின் நிலையை பட்டவர்த்தனமாக விளக்கும் படமாக உருவாகி இருக்கிறது சினம் கொள்.
நீண்ட வருடங்கள் சிறையில் அடைபட்டிருந்த தமிழ் போராளி விடுதலையாகி வருகிறார். தன் வீடு, மனைவி, மகள் என்ற குடும்ப வாழ்வு கனவுடன் இருப்பிடத்துக்கு வருகிறார். அவர் வாழ்ந்த இடத்தை இலங்கை ராணுவம் கைப்பற்றி இருக்கிறது. மனைவி, மகளும் அங்கில்லை என்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார். மனைவி, மகளை தேடும் அவர் சில போராளி நண்பர்களின் உதவியுடன் அவர்களை கண்டுபிடித்து சந்தோஷமாக வாழ் தொடங்குகிறார். அப்போது அரவிந்தன் மீது பெரிய பழி ஒன்று சுமத்தப்படுகிறது. ஏற்கனவே ஜெயிலில் இருந்த நிலையில் இந்த பழியில் தன்னை பிடித்தால் தன் கதி அவ்வளவுதான் என்று கலங்குகிறார். தன் மீது விழுந்த பழியை தானே துடைப்பதற்கான முயற்சியில் இறங்குகிறார். அது நடந்ததா என்பதற்கு படம் பதில் சொல்கிறது.

இலங்கை தமிழர் பிரச்சையை மையமாக வைத்து பல படங்கள் வந்திருக்கின்றன. அதிலிருந்து இது மாறுபட்டதாக உண்மை நிலவரத்தை சொல்லும் படமாக உருவாகி இருக்கிறது. இறுதிப்போருக்கு பின் இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலையை அப்பட்டமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ரஞ்சித் ஜோசப். இவர் அங்கேயே வாழும் தமிழர் என்பதால் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை அவர்களை அடக்க நடக்கும் சதிகளையும் தோலுரித்திருக்கிறார்.

சிறையிலிருந்து வெளியில் வந்து குடும்பத்தை தேடும் கதாபாத்திரத்தில் அரவிந்தன் சிவஞானம் நடித்திருக்கிறார். வாழும் கதாபாத்திரமாக மாறியிருக்கும் அரவிந்தன் முகத்தில் வெளிப்படுத்தும் உணர்வுகளில் ஆயிரம் அர்த்தங்கள் வெளிப்படுகின்றன.
பூர்வீக இடத்துக்கு சென்று காணும் முதல் காட்சியிலேயே இது ராணுவத்துக்குட்ட பகுதி உள் நுழைய தடை என்று எழுதப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகையே தமிழர்கள் இலங்கையில் வாழும் நிலையின் அவலத்தை உணர்த்துக்கிறது.

அரவிந்தனின் மனைவியாக நடித்திருக்கும் நர்வினி டெரி, வெளி நாட்டு தமிழராக நடித்திருக்கும் தனஞ்ஜெயன் மற்றும் லீலாவதி, தீபச் செல்வன், பாலா போன்றவர்கள் இயல்பான நடிப்பால் கவனத்தை ஈர்க்கின்றனர்.

எம். ஆர். பழனிகுமாரின் கேமரா தமிழர் வாழும் பகுதியின் சோகத்தையும், அவலத்தையும் அப்பட்டமாக படமாக்கியிருக்கிறது. என்.ஆர்.ரகுநந்தன் இசை இயல்போடு ஒத்திசைக்கிறது.

சினம்கொள் – தமிழர்களின் அவலத்தை கண்டால் சினம் கொள்வார்கள்.

Leave A Reply

Your email address will not be published.