சின்னக்குயில் சித்ராவின் பிறந்த தினம் இன்று

0

 

சின்னக்குயில்’ என அழைக்கப்படும் கே. எஸ். சித்ரா தனது இனிமை யான குரலால் தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்தவர், இசை ரசிகர்களால் “சின்னக் குயில்”, “கானக்குயில்” “வானம்பாடி” என பல்வேறு சிறப்பு பெயர் களால் அழைக்கப்படு கிறார். திரைப்படத் துறையில் சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம், இந்தி, ஒரியா, பஞ்சாபி என பதினைந் துக்கும் மேற்பட்ட மொழி களில் திரைப்படப் பாடல் களைப் பாடியுள்ளார். சுமார் 15,000 மேல் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ள அவர், ‘ஆறு முறை தேசிய விருதையும்’, ‘ஐந்து முறை தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதை யும்’, ‘பதினைந்து முறை கேரளா மாநில விருதை யும்’, ‘ஆறு முறை ஆந்திர மாநில விருதையும்’, ‘நான்கு முறை தமிழ்நாடு மாநில விருதையும்’, ‘இரண்டு முறை கர்நாடக மாநில விருதுகளையும்’ எனப் பல்வேறு விருது களை வென்று சாதனைப் படைத்துள்ளார். தன்னுடைய வசீகரக் குரலால் இசை நெஞ்சங்களில் என்றென்றும் புகழ்பெற்று விளங்குகிரார்.

Leave A Reply

Your email address will not be published.