பாடகர் வேல்முருகனுக்கு, “கிராமிய இசை கலாநிதி பட்டம்”

தர்மபுரம் ஆதினம் வழங்கினார்

0

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் விருதகிரீஸ்வரர் ஆலய குடமுழுக்கு கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திரைப்பட பின்னணி பாடகர் நாட்டுப்புற இசை பாடகருமான டாக்டர் வேல்முருகன் அவர்களுக்கு தர்மபுரம் ஆதினத்தால் “கிராமிய இசை கலாநிதி” என்கிற பட்டத்தையும் தர்மபுரம் அதினத்தின் உடைய ஆஸ்தான பாடகராகவும் அறிவித்துள்ளது இதற்கு முன்பாக டாக்டர். யேசுதாஸ் அவர்கள் இந்த பொறுப்பில் இருந்து வந்தார். அவர்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரு நாட்டுப்புற பாடகரை தர்மபுரம் ஆதினம் சிவாலயங்களுக்கு ஆஸ்த்தானபாடகராக அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.


“ஆன்மிக காவலர் ” அகர்சந்த் அவர்கள் “தொழிலாளர் துறை அமைச்சர் ” சி. வெ. கணேசன், “இயக்குனருமான இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் “கே. பி. அசோக் குமார் அவர்களின் முன்னிலையில் திரைப்பட பின்னணி பாடகர் நாட்டுப்புற இசை பாடகர் டாக்டர். வேல்முருகன் அவர்களுக்கு “கிராமிய இசை கலாநிதி “எனும் பட்டத்தை வழங்கி தங்கப்பதக்கத்தை அளித்து தர்மபுரம் ஆதினம் நாட்டுப்புற இசை கலைக்கு ஒரு கவுரவத்தை அளித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.