சிற்பி & பழனி பாரதி இணையும் ” முடக்கருத்தான் “

1

நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் சிற்பி & பழனி பாரதி இணையும் புதிய படம் ” முடக்கருத்தான் ”

கடந்த ஆண்டு கொரோனா அதிகரித்தபோது தமிழக சுகாதாரத் துறை மூலமாக சித்த மருத்துவர் கே .வீரபாபு அழைக்கப்பட்டு அவர் மூலமாக 6000 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு மரணமின்றி குணப்படுத் தப்பட்டது . மேலும் உழைப்பாளி உணவகம் என ஏழை மக்களுக்கு 10 ரூபாய் விலையில் அவர் உணவளித்து மக்களால் போற்றப்பட்டார்.

தற்போது  கே.வீரபாபு ‘முடக்கருத்தான்’ எனும் புதிய படத்தை இயக்கி நடிக்கிறார் . இப்படத்தை வயல் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
அருள் செல்வன் ஒளிப் பதிவு செய்ய , சிற்பி இசையமைக்கிறார். மேலும் இப்படத்திற்கு பழனி பாரதி பாடல்களை எழுதுகிறார் .நீண்ட இடை வெளிக்கு பிறகு இசையமைப்பாளர் சிற்பி & பழனி பாரதி இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது .படத் தொகுப்பினை ஆகாஷும் ,சண்டை பயிற்சியை சூப்பர் சுபராயனும் மேற்கொள்கிறார்கள் .இந்த படத்தின் இதர கதாபாத்திர தேர்வுகள் நடைபெற்று விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது

படத்தின் இணை இயக்குனர் -மகேஷ் பெரியசாமி.
ஒளிப்பதிவு அருள் செல்வன். தயாரிப்பு நிர்வாகம்  வேதா ரவி , ECR அன்பு. பாடல்கள் பழனி பாரதி. படத்தொகுப்பு ஆகாஷ். சண்டைபயிற்சி சூப்பர் சுப்பராயன். கலை இயக்கம்  பிரபஞ்சன். விளம்பர வடிவமைப்பு  ப்லெஸ்சன். மக்கள் தொடர்பு  ரியாஸ் கே அஹ்மத்.

Leave A Reply

Your email address will not be published.