கர்நாடகாவில் நவம்பர் 1ம் தேதி சிவாஜி 92வது பிறந்த நாள் விழா..

ராம்குமார் வாழ்த்து வீடியோ வெளியீடு..

23

நடிகர் திலகம் சிவாஜி 92வது பிறந்த தினம் கடந்த அக்டோபர் 1ம் தேதி சென்னை மற்றும் தமிழகமெங்கும் சிறப் பாக கொண்டாடப்பட்டது. சென்னை அடையாறில் உள்ள சிவாஜி நினைவு மண்டபத்தில் சிவாஜி சிலை அலங்கரிக்கப் பட்டது. சிலைக்கு அருகில் சிவாஜி உருவப்படமும் மலர் களால் அலங்கரித்து வைக்கப் பட்டது. தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் நேரில் வந்து சிவாஜி உருவப் படத்துக்கு மலர் தூவி மரியா தை செலுத்தி வணங்கினார்.

அமைச்சர்கள் ஜெயகுமார், ம.பா.பாண்டியராஜன், சிவாஜி மூத்த மகன் ராம்குமார், நடிகர் விக்ரம் பிரபு, துஷ்யந்த் மற்றும் ஏராளமான ரசிகர்கள், பொது மக்கள் விழாவில் கலந்து கொண் டனர்.
இந்நிலையில் வரும் நவம்பர் 1ம் தேதி கர்நாடகாவில் சிவாஜி 92வது பிறந்த நாளை ரசிகர்கள் சிறப்பாக கொண் டாட உள்ளனர். அவர்களுக்கு சிவாஜி மூத்த மகன் ராம்குமார் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நமஸ்காரா, கர்நாடகா ஸ்டேட் டாக்டர் சிவாஜி, டாக்டர் பிரபு வெல்ஃபேர் அசோசியேஷன் , நடிகர் திலகத்தின் 92வது பிறந்த நாளை நவம்பர் 1ம் தேதி கொண்டாடுகிறார்கள், அவர்களுக்கு எங்கள் வாழ்த் துக்கள், அன்னை இல்லத்தின் சார்பில் வாழ்த்துக்கள், அகில உலகத்திலிருக்கும் சிவாஜி ரசிகர் மன்றம் சார்பில் வாழ்த் துக்கள். எல்லோரும் அந்த விழாவில் சேர்ந்து கொண் டாட வேண்டும்.
நம் நடிகர் திலகத்தை எப்போதுமே நெஞ்சில் வைத்திருக்க வேண்டும். சரிதானே. ஜெய் ஹிந்த்
இவ்வாறு ராம்குமார் கூறி உள்ளார்.

 

Leave A Reply

Your email address will not be published.