சிவாஜி கணேசன் ஒரு சகாப்தம் – 107

19

நடிகர்திலகத்தின் பார்வையை பார்த்து பக்கத்தில் போனால் பயமாகத்தான் இருக்கும். ஆனால் அது எடை போடல். நெருங்குபவரை அலசும் தராசு அது.வெளிநாட்டு சீமான்கள் முதல் நட்பு பாராட்டிய உள்ளம் அது.ஆனாலும் ஒரு சாதாரணன் இடத்தில் கூட சாதாரணமாக பழகக் கூடியவர்.
மனதில் பட்டதை சட்டென்று சொல்லி விடுவார்.
ஒரு சமயம் படப்பிடிப்பின் இடைவெளியில் வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் பேசிக் கொண்டிருந்தார்.
மூர்த்தி படித்தவர்.மூர்த்தி என்னிடம் இருக்கும் நடிப்பையெல்லாம் உன்னிடம் தந்து விடுகிறேன்.உன் படிப்பையெல்லாம் எனக்கு தருகிறாயா? என்று கேட்டிருக்கிறார்.வெண்ணிற ஆடை மூர்த்தி சொன்னார். அண்ணே! நீங்கள் நினைத்தால் இப்போது படித்து கூட அதிகம் கற்றுக் கொள்ள முடியும் .ஆனால் உங்கள் நடிப்பை யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியுமா? என்றிருக்கிறார். இவ்வளவு பெரிய நடிகராக இருந்த போதும் எப்படி கேட்டிருக்கிறார்? பள்ளிப்படிப்பின் இழப்பை அவர் ஒரு வேதனையாகவே சுமந்து கொண்டிருந்தார்.அது அவ்வப்போது தன் பேச்சினூடே சொல்வார்.

நடிகர்திலகத்துக்கு இருதய பிரச்சினை வந்தபோது சிட்டுக்குருவி லேகியம் சாப்பிட்டு வந்தார்.அதனால் அவர் வீட்டில் சிட்டுக்குருவிகள் நிறைய கூண்டுகளில் வளர்க்கப்பட்டன.
திலகத்தை பார்க்க லதா மங்கேஷ்கர் வந்தார்.சிட்ட்டுக்குருவி கூண்டுகளை பார்த்தவர் கேட்க விளக்கம் சொல்லப்பட்டது.ஒரு கணம் அதிர்ச்சியானவர், நடிகர்திலகத்திடம் என் குரல் எப்படியுள்ளது என கேட்டிருக்கிறார்.நடிகர்திலகமும் இப்போது எதற்கு இக் கேள்வி என்று ஆச்சர்யத்துடன், இந்த சிட்டுக்குருவிகளைப் போல் அழகாக உள்ளது என்றிருக்கிறார்.லதாவும்,இந்த சிட்டுக்குருவிகளைப் போல் பாடுவதாக கூறுகிறீர்களே! அப்புறம் எப்படி இச் சிட்டுக் குருவிகளை சாப்பிட மனம் வந்தது என கேட்க, நடிகர்திலகம் ஒரு கணம் திகைத்து போனார்.பின் அப்போதே கூண்டுகளை எல்லாம் திறந்து சிட்டு குருவிகளை பறக்க விட்டார்.அது முதல் சிட்டுக் குருவிகளை சாப்பிடுவதையும் நிறுத்தி விட்டார்.நடிகர்திலகம் இது போன்ற பண்புகளாலும் திலகம் தான்.
படப்பிடிப்புக்கு சில சமயம் நாகேஷ் லேட்டாக வருவதுண்டு.அப்படி ஒரு சமயம் முக்கியமான படப்பிடிப்புக்கு வர லேட்டாகி விட்டது.லேட்டாக வந்தால் நடிகர்திலகம் கோபிப்பாரே என்று ஒரு முன் யோசனையுடனே வந்தார்.நடிகர்திலகம் மேக்கப் எல்லாம் முடித்து காத்திருந்தார்.நாகேஷ் லேட்டாக வர, நடிகர்திலகமும்
வழக்கம் போல் விசாரிக்க, அதை திசை திருப்ப, நாகேஷ் திலகத்தின் முகத்தையே உற்று நோக்கி, என்ன அண்ணே இது! புருவ மேக்கப்பில் சற்று வித்தியாசம் இருக்கிறதே என்று கூற,திலகமும் அதில் கவனம் செலுத்தி என்ன வித்தியாசம் என்று மேக்கப்பை ஆராய தொடங்கினார்.நடிகர்திலகத்தின் மேக்கப்பில் எந்த தவறும் இல்லை, தான் தப்பிக்க கையாண்ட உத்திதான் அது என நாகேஷ் ஒரு பேட்டியில் கூறினார்.நடிகர்திலகத்தின் தொழில்பக்திக்கு இது ஒரு உதாரணம்.

நடிகர்திலகத்தின் நடையழகை சாய்பாபா ரசித்த செய்தி தான் அதிகம் தெரியும்.அதே போல் இன்னொரு ஆச்சர்ய செய்தி இது.
பைலட் பிரேம் நாத் படப்பிடிப்பிற்காக இலங்கை சென்றார் நடிகர்திலகம்.அவரை விமான நிலையத்திலேயே வரவேற்பதற்காக இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே சென்றிருக்கிறார்.அந்த விஷயம் தெரியாமல் நடிகர்திலகம் விமானத்தை விட்டு எப்போதும் போல் இயல்பாக நடந்து வந்து வெளியேற வருகிறார்.அப்போது திடீரென வந்த ஜெயவர்த்தனே நடிகர்திலகத்தின் முன் நின்று ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.மேலும் தான் முன்னமே வந்து விட்டதாயும், நீங்கள் நடந்து வரும் நடை அழகை பார்ப்பதற்கும் வேண்டியே காத்திருந்ததாகவும் கூறி மேலும் வியக்க வைத்தார்.இலங்கை பிரச்சினைகளால் ஜெயவர்தனேவின் இந்த செயல் அதிகளவில் கொண்ட திராவிட தமிழ் மீடியாக்களால் இது அதிகம் பகிரப்படாத செய்தியாகவே இருக்கிறது.
1971லிருந்து 1975 வரை ஜம்மு காஷ்மீர் முதல்வராக பதவி வகித்தவர் மீர் காசிம்.நடிகர்திலகம் பற்றிய பதிவில் அவரைப் பற்றி ஏன்? என்ற கேள்வி வருகிறதா? அவருடைய அந்த ஆட்சி காலத்தில் தான் ஜம்மு மாநில குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக ரூபாய்( 25,000 ) இருபத்து ஐந்தாயிரத்தைத்தை நன்கொடையாக வழங்கியிருக்கிறார் நடிகர்திலகம் சிவாஜிகணேசன்.இங்கேயெல்லாம் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய ஆதாயம் தேட அதிக விளம்பரம் செய்து நன்கொடை கொடுப்பார்கள் சிலர்.இதுதான் வாடிக்கை.இந்தியாவை பேதமாக பார்க்காதவர் நடிகர்திலகம். ஜம்மு காஷ்மீருக்கெல்லாம் நன்கொடை கொடுத்து இவர் அடையும் ஆதாயம் என்ன இருக்க முடியும்? இதெல்லாம் யார் நினைத்து பார்க்கிறார்கள் இங்கே? இந்தியாவின் கடைக்கோடி தமிழன் இந்தியாவின் உச்சிக்கு செய்த தேச மரியாதை, பக்தி தான் அது!

மீண்டும் …
செந்தில்வேல் சிவராஜ்…
?♻️?♻️?♻️??♻️♻️

Leave A Reply

Your email address will not be published.