சிவாஜி கணேசன் ஒரு சகாப்தம் – 118

10

சிவாஜியை சிவாஜியுடன் மோத விட்டு ! …

1967 -இல் ஏசிடி சிவாஜியை வைத்து இரு மலர்கள் படத்தை இயக்கினார். அவர் இயக்கிய படங்களில் இரு மலர்களே ஆகச்சிறந்த படம் என்று சொல்கிறவர்கள் இருக்கிறார்கள். இரு மலர்கள் வெளியாவதாக இருந்த அதே தினத்தில் ஸ்ரீதர் இயக்கத்தில் சிவாஜி நடித்த ஊட்டி வரை உறவு படமும் வெளியீட்டுக்கு தயாரானது. ஒரேநாளில் ஒரு நடிகரின் இரு படங்களா என்று பஞ்சாயத்து எல்லாம் பேசாமல் இரு மலர்களையும், ஊட்டி வரை உறவையும் ஒரேநாளில் வெளியிட்டனர். இரு படங்களும் 100 நாள்களை கடந்து ஓடின.

1970 -இல் மீண்டும் அதுபோன்ற ஒரு சூழல். ஏசிடி சிவாஜியை வைத்து எங்கிருந்தோ வந்தாள் படத்தை எடுக்கிறார். டி.ஆர்.ராமண்ணா சிவாஜியை வைத்து சொர்க்கம் படத்தை எடுக்கிறார். இரண்டுக்கும் ஒரே ரிலீஸ் தேதி. இரண்டும் ஒரே நாளில் வெளியாகிறது. இரண்டுமே ஹிட். 100 நாள்களை தாண்டுகின்றன.

1975 -இல் சிவாஜியை வைத்து டாக்டர் சிவா படத்தை இயக்கிய போதும், இயக்குனர் ஸ்ரீதர் போட்டியாக வருகிறார். ஸ்ரீதர் சிவாஜியை வைத்து வைர நெஞ்சம் படத்தை இயக்கியிருந்தார். இரண்டுக்கும் ஒரே ரிலீஸ் தேதி. இரண்டுமே 100 நாளை கடந்து வெற்றி பெறுகின்றன.

சிவாஜியை சிவாஜியுடன் மூன்றுமுறை மோதவிட்டு மூன்று முறையும் வெற்றிபெற வைத்ததுள்ளார் ஏசி திருலோகசந்தர். அவர் எப்பேர்ப்பட்ட ஜாம்பவான் என்பதற்கு இது சின்ன உதாரணம்.

Leave A Reply

Your email address will not be published.