சிவாஜி கணேசன் ஒரு சகாப்தம் – 119

17

 

 

பாபு படத்தில் அவர் உணர்ச்சி பிழம்பாய் தோன்றிய காட்சிகள் ஏராளம் , இருந்தாலும் எனது மனக்கண்ணில் ஆறாத புண்ணாக இருக்கும் ஒரு காட்சியை இங்கே குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.

பாசமாய் வளர்த்த வளர்ப்புப்பெண் , தன்னை “ரிக்ஷாக்காரன்” என்று பழித்து கூறிய போதும் , அவளிடம் தனது மனநிலையை காட்டாமல் பள்ளிக்கு அனுப்பிவிட்டு ஒரு கல்லின் மேல் தனியாக வந்து அமர்ந்து கொண்டு இருமியபடியே இருதய வலியையும் பொறுத்துக் கொண்டு அழவேண்டும்.

இந்த காட்சி படமாக்கப்படும் போது படப்பிடிப்பு அரங்கில் அழாதவர்களே கிடையாது.

காட்சி முடிந்ததும் அவரால் எழ முடியவில்லை. எனக்கு ஏதோ தோன்றியதால் ஓடிச் சென்று அவரைக் கை கொடுத்து தூக்கினேன்.

ஆனால் அவர் மார்பின் கீழே கையைக் கொடுத்துக் கொண்டு இருதய வலியால் துடித்தார்.

நான் கலங்கி விட்டேன்.”கலைத் தாயே உன் மகனை காப்பாற்று” என்று கடவுள்களை கையெடுத்து கும்பிட்டு வேண்டினேன்.

இப்படிப்பட்ட ஒரு முழுமை பெற்றக் கலைஞனை தமிழனுக்கு சொந்தமாக கொடுத்த தமிழன்னையை வாயார வாழ்த்துகிறேன்.

Leave A Reply

Your email address will not be published.