நம்மாழ்வார் விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு…

குவியும் வாழ்த்துகள்

14

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அயலான், டாக்டர் திரைப்படம் உருவாகி உள்ளது. சிவகார்த்திகேயன் அவ்வப்போது நலிந்த கலைஞர்கள், கஷ்டப்படும் விவசாயிகள், ஏழை மாணவர்களின் படிப்பு ஆகியவற்றிக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார்.

அந்த வகையில் ஏழை மாணவியின் மருத்துவ கனவை நனவாகியது, நெல் ஜெயராமன் மகனின் படிப்பு செலவை ஏற்றுக்கொண்டது, நடிகர் தவசியின் மருத்துவ செலவிற்கு உதவி செய்தது என பல உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில் தமிழக பாரம்பரிய விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் ஐந்திணை வேளாண் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை இணைந்து நடத்தும் பாரம்பரிய வேளாண் திருவிழாவில் வழங்கப்படும் நம்மாழ்வார் விருதுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.