“இயக்குனருக்கு தங்க செயின் அளித்த சிவகார்த்திகேயன்”

2

கார்த்திக் வேணுகோபால், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ ராஜ் நடிப்பில் 2019 ஆம் வெளியாகி வெற்றி பெற்ற, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா,படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான புதுமுக இயக்குனர்.. மேலும் Blacksheep இன் OTT தளமான “Bs Value “ இன் தலைமை பொறுப்பையும் ஏற்று வகிப்பவர்… கடந்த நவம்பர் 15 ஆம் தேதி கோயம்புத்தூரில் இவருக்கு திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவில் நடிகரும், தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்… தன்னால் தவிர்க்க இயலாத காரணத்தினால் திருமணத்திற்கு வர முடியவில்லை என்று சொல்லிவிட்டு, பின் யாருக்கும் தெரிவிக்காமல் தானே கிளம்பி கோவை சென்று, அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக திருமண மண்டபத்திற்குள் திடீரென நுழைந்து கலகலப்பாக்கியிருக்கிறார்.. மேலும் மாப்பிள்ளைக்கு தங்க செயின் ஒன்றையும் பரிசளித்து, தானே முன் வந்து, அத்தனைக் கூட்டத்திலும், பந்தியில் பொது மக்களோடு அமர்ந்து சாப்பிட்டு விடைபெற்றார்…

கலகலப்பாக நடந்து முடிந்த இந்த திருமண விழாவின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைதளத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது… புதுமுக இயக்குனரிலிருந்து புது மாப்பிள்ளையாகியிருக்கும் கார்த்திக் வேணுகோபாலிற்கு கிடைத்திருக்கும் கல்யாண பரிசாக விரைவில் அவருடைய இரண்டாவது படத்தை, சற்றே பிரம்மாண்டமாக தொடங்கவிருக்கிறாராம்..

Leave A Reply

Your email address will not be published.