சூரரைப் போற்று’ ட்ரெய்லர் 26ம் தேதி வெளியாகிறது..

17

சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று. சுதா கொங்கரா இயக்கி உள்ளார். ஜிவி.பிரகாஷ் இசை அமைத்திருக்கிரார். இப்படத்தை அக்டோபர் 30 ம் தேதி அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக் கப்பட்டது.
ஆனால் படம் வெளியிட என் ஓ சி (நோ அப்ஜெக்‌ஷன்) பிரச்னைகளால் பட ரிலீஸ் தள்ளி வைப்பதாக சூர்யா தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறும்போது, ‘சூரரைப் போற்று பிரம்மாண்ட அனுபவத்தை வார்த்தை களால் விளக்கி விட முடியாது. படத்தில் விமானப்படை சார்ந்த காட்சிகள் வருவது உங்கள் அனைவருக்கும் தெரி யும். அதனால் அது சம்பந்த மாக ஏராளமான நடைமுறை களும் அனுமதிகளும் பெற வேண்டி யிருந்தது. இப்படம் தேசிய பாதுகாப்பு பற்றி பேசுவதால் அது சம்பந்தமாக இந்திய விமானப்படையுடன் நாங்கள் தொடர்புகொண்டு அணுகி அவர்களது ஒத்து ழைப்பையும் பெற வேண்டி இருந்தது.படம் வெளியிடுவதற்கு முன் அவர்களிடம் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டி இருப்பதால் பட வெளியீடு சற்றுத் தாமதம் ஆகிறது.இது வழக்கமான நடைமுறைதான்
வேறொன்றுமில்லை. கவலை வேண்டாம்’ என்றார்.
இந்நிலையில் சூரரைபோற்று படத்துக்கு என் ஓ சி கிடைத்து விட்டதாக பட தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் அறிவித்திருக்கிறார்.


’சூரரைப் போற்று’ பட ரிலீஸ் பற்றி விரைவில் அறிவிக்கபட உள்ளது.
இந்நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இப்படத்தின் டிரெய்லர் வரும் 26ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது, மேலும் இப்படத்துக்கு என் ஓ சி வழங்கிய அதிகார்களுக்கும் சம்பந்தப்பட்ட டுறையினருக்கும் சூர்யா நன்றி தெரிவித்திருக்கிறார்.

 

Leave A Reply

Your email address will not be published.