சவுந்தர்யா ரஜினி தொடங்கிய “ஹூட்” (hoote) உலகின் முதல் குரல் செயலி

0

ரஜினிகாந்த் மகளும், ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான பட இயக்குனருமான சவுந்தர்யா ’ஹூட்’ என்ற வாய்ஸ் செயலி (ஆப்) தொடங்கி உள்ளார். அதன் தொடக்கவிழா சென்னையில் உள்ள நடசத்திர ஓட்டலில் நடந்தது. முதன்முதலாக  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குரல் பதிவு செய்து செயலியை தொடங்கி வைத்தார். அப்போது செயலி பெரிய அளவில் வெற்றி அடைய வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செயலி பற்றி சவுந்தர்யா பத்திரிகை, மீடியாக்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தி பேசினார். அவர் கூறும்[போது,’ என் தலைவர் மட்டுமல்ல எனக்கு எல்லாமே  என் அப்பாதான்.அவர்  அரசியலுக்கு வருவதுபற்றி  கடந்த 2020ம் ஆண்டு ஒரு டிவிட் செய்திருந்தார். அப்போது ஒரு குரல் எனக்கு அவரிடமிருந்து வந்தது. அரசியல் நிகழ்வு நடக்கவில்லை ஆனால் எனக்கு கேட்ட அந்த குரல்தான் ஹூட் என்ற செயலியாக என்னால் உருவாக்க முடிந்தது. அதற்கான பணிகளை தொடங்கினேன். ரஜினிகாந்த் வி எஸ் வி, எனது நண்பரும், உலகலாவிய வணிக தலைவரான சன்னி கோகலாவுடன் இணைந்து  உலகிற்கு இந்தியாவிலிருந்து அறிமுகப்படுத்தும் முதல் குரல் அடிப்படையிலான சமூக வலை தளமான ஹூட் இன்று வெளியிடப்படுகிறது.  இதில் அனைவரும் இணைந்து  தங்கள் குரல் மூலம் 60 நொடிகள் தங்கள் எண்ணங்கள், உரையாடல் என பதிவிடலாம்.

தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி, சீனா என உலகின் அனைத்து மொழிகளிலும் இதனை பயன்படுத்த முடியும்.  இனி டிஜிட்டல் உலகின் எதிர்காலம் இப்படித்தான் இருக்கும்.

இவ்வாறு சவுந்தர்யா கூறினார்.

இதுதொடர்பாக முழுமையான பத்திரிகை மற்றும் ஊடக செய்தியும் சவுந்தர்யா வெளியிட்டார். அதில் கூறி உள்ளதாவது:

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பி ஆர் ஓ ரியாஸ் அஹமத் செய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.