நடிகை செளகார் ஜானகி பிறந்த நாளின்று

4

சுமார் 70 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் கோலோச்சிவரும் நட்சத்திர நடிகை செளகார் ஜானகி. இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், என்று பல மொழிகளில் 387 படங்களிலும் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் நடித்துச் சாதனை படைத்திருக்கிறார்.

ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் இதே டிசம்பர் 12ல் (1931) பிறந்தார், அவரது தந்தை வேலைக்காக சென்னை வந்தபோது, அவருக்கு 12 வயது. போக் ரோடில் உள்ள ஒரு வீட்டில் குடியேறினார். அப்போது வானொலி நிலையத்தில் பாலர் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அவரின் தமிழ் உச்சரிப்பைக் கேட்டு விஜயா ஸ்டூடியோவின் பி.என்.ரெட்டி அவரை பற்றி விசாரித்துவிட்டு அவரின் வீட்டிற்கு சென்று `சினிமாவில் நடிக்கிறாயா?’ என்று கேட்டபோது தயக்கமில்லாமல் `சரி’ என்று சொல்லிவிட்டார். முதலில் வீட்டில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவசரம் அவசரமாக வரன் பார்த்து குண்டூரில் ரேடியோ இன்ஜினீயராக இருந்த ஸ்ரீனிவாசராவ் என்பவருக்கு அவரை திருமணம் செய்து கொடுத்துவிட்டனர்.

பின்னர், தனது கணவரின் அனுமதியுடன் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். முதன் முதலாக என்.டி. ராமாராவு நடிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் நன்றாக ஓடியது அந்தப் படம் தான் ‘செளகார்’. அதன் பிறகு வாய்ப்பு இல்லாமல் இருந்த அவருக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரம் எடுத்த ‘வளையாபதி’ படத்தில் கதாநாயகி வாய்ப்பு கொடுத்தார். பாரதிதாசனின் கதை-வசனம். ‘வளையாபதி’ வெளியான அன்றுதான் சிவாஜி கணேசனின் ‘பராசக்தி’ வெளியானது. படம் நன்றாக ஓடினாலும் பராசக்தி அளவுக்கு ஓடவில்லை. பின்னர் ஜெமினி தமிழில் எடுத்த ‘மூன்று பிள்ளைகள்’ படத்தைத் தெலுங்கில் எடுத்தபோது கதாநாயகி வாய்ப்பு நடிகை செளகார் ஜானகிக்கு அளித்தார்கள். பின்னர், பாலசந்தர் இயக்கத்தில் ‘மெழுகுவர்த்தி’ எனும் நாடகத்தில் நடித்தார். அதில் நாகேஷ், ஸ்ரீகாந்த் எல்லாரும் நடித்தார்கள். பின்னர், அவரது இயக்கத்தில் ‘காவியத் தலைவி’ நடிச்சப்போ அவருக்கு 40 வயசு. அதில ‘அம்மா’, ‘மகள்’ என்ற இரண்டு வேடங்களில் நடித்தார் படம் பெரும் வெற்றி.

பின்னர், எம்.ஜி.ஆரோட `பணம் படைத்தவன்’, `ஒளி விளக்கு’ என்று பல படங்கள் நடிகை செளகார் ஜானகி நடிக்கத் தொடங்கினார். ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’யில் ஜெயலலிதா இவருக்கு மகளாக நடித்து இருக்கிறார். மேலும், சிவாஜி ஃபிலிம்சின் `புதிய பறவை’யில் கிளாமர் ரோலில் நடித்ததற்கப்புறம் தான் அவரது திரையுலக வாழ்க்கையில் திருப்பமே ஏற்பட்டது. நல்ல நல்ல கதாபாத்திரங்கள் அவருக்கு வந்தன. பாலசந்தரின் ‘பாமா விஜயம்’, ‘எதிர் நீச்சல்’, ‘தில்லு முல்லு’ ஆகியவை அவருக்கு வேறு ஒரு அந்தஸ்தைக் கொடுத்தன. இன்றைக்கும் அபூர்வமாக நடித்து வரும் செளகாருக்கு ஆந்தை சினிமா அப்டேட்ஸ் குழு சார்பில் ஹாப்பி பர்த் டே சொல்வதில் ஹேப்பி

Leave A Reply

Your email address will not be published.