ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் (திரைப்பட விமர்சனம்)

6

படம் : ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்

நடிப்பு: டாம் ஹோலண்ட், ஸென்தயா, பெண்டிக்ட் கம்பெர்பேட்ச்

இசை: மைக்கேல் கிளாச்சினோ

ஒளிப்பதிவு: மயுரோ பியோரே

தயாரிப்பு: கெவின் ப்ஜி. எமி அஸ்கல்

இயக்கம்: ஜான் வாட்ஸ்

ஹாலிவுட் படமென்றால் இப்படித்தான் பிரமாண்டமாக இருக்கும் என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக இப்படத்தை இயக்கி இருக்கிறார் ஜான் வாட்ஸ்.

காட்சிகளை எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்துவிடலாம் அதெல்லாவற்றையும் திரையில் காட்டுவதற்கு அசாத்திய உழைப்பும், தொழில் நுட்பமும் தேவை. இந்த இரண்டும் இப்படத்தில் இணைந்து செயல்பட்டிருப்பதால் கற்பனைக்கு அப்பாற்பட்ட காட்சிகளையும் கண்முன் நிறுத்தி பிரமிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்..

கடந்த முறை வெளியான ஸ்பைடர் மேன் ஃபார்  ப்ரம் ஹோம் படத்தின் இறுதியில் முடிந்த காட்சியிலிருந்து இப்படம் தொடங்குகிறது. புது ஸ்பைடர் மேன் டாம் ஹோலண்ட் இளமை துடிப்புடன் இருக்கிறார்.

பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர் மேன்  என்பது எல்லோருக்கும் தெரிந்துவிடுவதால் அவரால் பிரச்னை ஏற்படும் என்று எண்ணி பல்கலைகழகத்தில் அவருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் படிக்க சீட் தர மறுக்கப்படுகிறது. இதனால் தான் ஒரு ஸ்பைடர் மேன் என்ற நினைவை எல்லோர் நினைவிலிருந்தும் அழித்து பல்கலைக் கழகத்தில் சீட் பெற முடிவு செய்கிறான். அதற்காக டாக்டரிடம் ஸ்ட்ரேஞ்சிடம்  உதவி கேட்கிறான். அதன் விளைவுகள் விபரீதத்தில் முடிகிறது. அதற்கு எவ்வாறு தீர்வு காணப்படுகிறது என்பது கிளைமாக்ஸ்.

ஸ்பைடர் மேன் படத்திற்கு ஸ்பைடர் டிசைன்போட்ட காஸ்டியூம் மட்டுமே போதுமானதில்லை என்பதை மீண்டும் ஒருமுறை இப்படம் நிரூபித்திருக்கிறது.
ஆக்‌ஷன் காட்சிகள் அதிக அளவில் இடம்பிடித்து அரங்கையே அதிர வைக்கிறது.

ஹீரோ டாம் ஹோலண்ட் சண்டை காட்சிகளை அநாயிசமாக செய்திருக்கிறார். வெளி பிரபஞ்சங்களிலிருந்து வரும் ஆக்டோபஸ், பல்லி மனிதன், மின்சார மனிதன் போன்றவர்களின் ஆக்ரோஷமான தாக்குதல் ஹீரோவை நிலை குலையச் செய்யும் காட்சிகள் அதேநேரத்தில் அவருக்கு துணையாக மேலும் 2 ஸ்பைடர்மேன்கள் களத்தில் குதித்து வில்லன் எந்திர மனிதர்களை அழித்து படத்தை முடித்து வைக்கின்றனர்.

இறுதியாக பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர்மேன் என்பதை அவரது காதலி உள்ளிட்ட அனைவரும் மறந்த சாதாரண இளைஞனிடம் பழகுவதுபோல் முடிவடையும் காட்சிகள் அடுத்த அதிரடி படைப்புக்கு புதுகளம் தயாராகிறது என்பதை உணர்த்துவதாக உள்ளது.

ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் – விஎப் எக்ஸ் பிரமாண்டங்களுடன் ஹீரோவின் ஆக்‌ஷன் அதகளம்.

Leave A Reply

Your email address will not be published.