கதாசிரியர் விந்தன் காலமான தினமின்று

1

விந்தன் [கதை, திரைக்கதை, வசன எழுத்தாளர், பாடலாசிரியர்] காலமான தினமின்று.

செங்கல்பட்டு மாவட்டம், நாகளூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர் கோவிந்தன் என்கின்ற விந்தன்.

இவர் இளம் வயதிலேயே சென்னைக்கு வந்து, பத்திரிகை அலுவலகங் களில் அச்சு கோர்ப்பா ளராக பணிபுரிந்து வந்தார். பின்னர் சொந்த மாக ”மனிதன்” என்னும் பத்திரிகையை ஆரம்பித்து ஓராண்டு காலம் நடத்தி னார். “கல்கி” இதழில் உதவி ஆசிரியராகவும் சில காலம் பணியாற்றினார். அந்தக் காலத்தில்தான் எழுதவும் ஆரம்பித்தார். ஏழிசை வாரதி எம்.கே.தியாகராஜபாகவதரின் கதையை நூல் வடிவில் பிரசுரித்து வெளியிட்டார். 13 சிறுகதைத் தொகுப்புகள், 5 நாவல்கள், 8 கட்டுரைத் தொகுதிகள் இவர் எழுதியிருக்கிறார்

விந்தன் வசனம் மட்டும் எழுதிய படங்கள் வாழப் பிறந்தவள், மணமாலை, சொல்லு தம்பி சொல்லு, குழந்தைகள் கண்ட குடியரசு உள்ளிட்டவை. 1953 முதல் 1960 வரை ஏழு வருடங்களில் 7 படங்களில் பணியாற்றியுள்ளார் விந்தன். 5 படங்களுக்குப் பாடல்கள் எழுதினார். அவற்றில் இரண்டு படங்களுக்குத் திரைக் கதை, வசனம் எழுதினார். அதன் பின்னர் திரையு லகம் அவரை மறந்தே விட்டது.

1975-ஆம் ஆண்டு தனது 59-ஆவது வயதில் இதே ஜூன் 30இல் திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் காலமானார். விந்தனின் படைப்புக்களைத் தமிழக அரசு நாட்டுடமையாக் கியது. திரையிசைக்காக எட்டுப் பாடல்களே எழுதி னாலும் அவையெட்டும் திரையிசை ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடத்தைப் பிடித்தப் பாடல்களாகும்.

Leave A Reply

Your email address will not be published.