ஸ்டண்ட் மாஸ்டர் சிவா கதாநாயகன் ஆனார்

17

யூத், பிரியமுடன், வாட்டாக்குடி இரண்யன், ஜித்தன் ஆகிய படங்களை டைரக்டு செய்த வின்சென்ட் செல்வா, சில வருட இடைவெளிக்குப்பின் ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இந்தப் படத்துக்கு ‘வேட்டையன்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. பாலு கே. தயாரிக்கிறார்.

இதில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர், ‘ஸ்டண்ட் சிவா கதாநாயகனாக நடிக்கிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பிரெஞ்சு ஆகிய 6மொழிகளில், 150-க்கும் மேற்பட்ட படங்களுக்கு சண்டை பயிற்சி அளித்தவர். ‘வேட்டையன்’ படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார்.

கேரளாவைச் சேர்ந்த நேஹா மேனன் கதாநாயகியாக அறிமுகம் ஆகி–றார். இவர், ‘மிஸ் கேரளா’வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இன்னொரு கதாநாயகியாக வைசாலி நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சுபா வெங்கட் ஆகிய மூன்று பேரும் முக்–கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்தை பற்றி டைரக்டர் வின்சென்ட் செல்வா கூறியதாவது:

“நான் இதற்கு முன்பு இயக்கிய ‘வாட்டாக்குடி இரண்யன்’ படம், மனிதனே மனித இனத்துக்கு துரோகம் செய்வதை பேசியது. வனத்தையும், வனவிலங்குகளையும் அழிக்க நினைப்பது எவ்வளவு பெரிய துரோகம் என்பதை சொல்ல வருகிறது, ‘வேட்டையன்’.

படம் கேரளாவின் மலையட்டூர், இல்லித்தோடு, முக்கம் பகுதிகளில் வளர்ந்துள்ளது. சத்தியமங்கலம் வனப்பகுதிகளில், சில முக்கிய காட்சிகள் படமாக்கபட்டன”.

Leave A Reply

Your email address will not be published.