ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்த வெற்றி ரகசியங்கள்

20

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் சினிமா மற்றும் தொலைக்காட்சிக்கான பிரிட்டிஷ் அகாடமி அமைப்பான பாப்தாவுக்கு தூதுவராக நியமிக்கப்பட்டார். இதற்காக அவருக்கு சமூக வலைத்தளத்தில் பலரும் பாராட்டுகள் தெரிவித்தனர். இந்த நிலையில் ஏ.ஆர்.ரகுமான் வெற்றிக்கான ரகசியங்கள் குறித்து பேசி இருப்பதாவது:-

“ஒரே மாதிரியான விஷயங்களில் இருந்து வெளியே வந்து புதிய வழிகளை காண வேண்டும். சினிமா, கலை, எழுத்து போன்ற எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். 5 நாட்களுக்கு ஒரே உணவை சாப்பிட முடியாது.

எனக்கு நான் தொடர்ந்து சவால் விடுத்துக்கொண்டே இருக்கிறேன். எதுவும் செய்யாமல் பேசாமல் உட்கார்ந்து இருந்தால் மாயாஜால விஷயங்கள் எதுவும் நடந்து விடாது. அப்படி இருந்தால் மூளையும் வேலை செய்யாது.ஒரு காரியத்தை செய்து முடித்த பிறகு அதில் இருந்து விலகி விட வேண்டும்.

சலிப்பு என்பது எல்லோருக்கும் வரக்கூடியது. புதிய விஷயங்களை செய்வதன் மூலம் அதில் இருந்து மீள முடியும். சொகுசு வாழ்க்கையில் இருந்து வெளியேறி புதுமைகளை செய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள திறமைசாலிகள் உலக அளவில் சாதிப்பதை காண ஆர்வமாக இருக்கிறேன்.”

இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.