சுல்தான் கிட்டத்தட்ட மகாபாரத கதைதான் – இயக்குனர் பாக்யராஜ் கண்ணன்

103

கைதி படத்திற்கு பிறகு கார்த்தி நடித்து வரும் படம் சுல்தான். ராஷ்மிகா மந்தனா ஹீரோயின். யோகிபாபு, கே.ஜி.எப் படத்தின் வில்லன் ராமச்சந்திர ராஜூ நடித்திருக்கிறார்கள். விவேக் மெர்வின் இசை அமைத்துள்ளார். ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்குகிறார்.

படம் பற்றி அவர் கூறியதாவது:

சுல்தான் கிட்டத்தட்ட மகாபாரத கதைதான் ஒரு சின்ன வித்தியாசம் மகாபாரதத்துல கிருஷ்ணர் கௌரவர்கள் பக்கம் நின்னா எப்படி இருக்கும், அந்த புள்ளி தான் இந்த படம். நீரின்றி அமையாது உலகுனு சொல்லுவாங்க அதே போல் தான் உறவின்றி அமையாது உலகு. உறவுகளுக்காக முன்ன வந்து நிற்கும் ஒருவனின் கதை தான் இந்தப்படம். பரபரப்பான திரைக்கதையில் காதல், காமெடி எல்லாம் சரிவிகிதத்தில் கலந்த கமர்ஷியல் படமா இருக்கும். ஏப்ரல் 2 ஆம் தேதி உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது . என்றார்.

Leave A Reply

Your email address will not be published.