கார்த்தியின் ’சுல்தான்’ பட இயக்குனர் திருமணம்

கல்யாண ஆல்பம்

19

கொரோனா ஊரடங்கு தளர்வில் பிரபல இயக்குனர் ஒருவரின் திருமணம் சத்தமில்லாமல் நடந்து முடிந் திருக்கிறது.

சிவகார்த்திகேயன் நடித்த ’ரெமோ’ படத்தை இயக்கியவர் பாக்கியராஜ் கண்ணன் இவர் கார்த்தி நடித்துள்ள ’சுல்தான்’ படத்தையும் இயக்கி உள்ளார். ’சுல்தான்’ படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் அதன் அடுத்த கட்ட பணிகள் நடக்கி றது. இதற்கிடையில் பாக்ய ராஜ் கண்ணனுக்கும் ஆஷா என்பவருக்கும் திருமணம் நடந்தது.

 

திருமண விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு போன்றவர்கள் நேரில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில்,’பாக்கியராஜ்- ஆஷா தம்பதிக்கு வாழ்த்துக்கள். திருமண வாழ்வு

என்ற பயணத்தை தொடங்கி உள்ளீர்கள். இது ஒரு புது பயணம் அதில் இருவரும் அன்போடு இணைந்திருங்கள். புரிதலும் ஒருவருக்கொருவர் அதிக அன்பு காட்டியும் கடவுள் ஆசியுடன் வாழ வாழ்த்துகிறேன்’ என தெரிவித் திருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.