சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதலில் ரசிகர் மன்றம் தொடங்கிய மதுரை முத்துமணி காலமானார்!.

1

ரஜினி ரசிகர் மன்றத்தை கிட்டத்தட்ட 43 வருஷங்களுக்கு முன் நிறுவியவர் முத்துமணி என்பவர். இவர் முதன் முதலில் மதுரையில் ரசிகர் மன்றத்தைத் தொடங்கிய பின்னர்தான் ரஜினி ரசிகர் மன்றம் தற்போது தமிழகம் தாண்டி உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனால் தனக்கு முதல் ரசிகர் மன்றத்தை நிறுவிய முத்துமணி மீது அன்புகொண்டு அவரிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசியில் உரையாடுவது வழக்கம். இந்நிலையில், முத்துமணி இன்று காலமானதாக தகவல் வெளியாகிறது. இது ரஜினிகாந்த் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்.. ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் பாண்ட் முதல் நடிகர் முரளி, ஸ்ரீகாந்த் தமிழ் நடிகர்கள் வரையில் பெரும்பாலான நட்சத்திரங்களுக்குத் தமிழகத்தின் முதல் ரசிகர் மன்றத்தைத் தொடங்கிய ஊர் மதுரை. ரஜினிகாந்த்துக்கும் கூட முதல் ரசிகர் மன்றம் மதுரையில்தான் தொடங்கப்பட்டிருக்கிறது. இன்று அது மிகப்பெரிய ஆலமரமாகி, அடுத்து அரசியல் விருட்சமாக மாறவுள்ள நிலையில், ‘கவர்ச்சி வில்லன் ரஜினி ரசிகர் மன்றம் என்ற விதை நட்டது முத்துமணி என்ற 18 வயதுப்பையன், அபூர்வராகங்கள் படம்பார்த்துவிட்டு வந்து, தொடங்கிய ரசிகர் மன்றம் இது.

மன்றத்தைத் தொடங்கிய முத்துமணியிடம் முன்பொரு முறை பேசிய போது. “மதுரை அலங்கார் தியேட்டர்ல 1975ல ‘அபூர்வராகங்கள்’ படம் ரிலீஸ் ஆச்சு. அதில் ரஜினி மொத்தமே 20 நிமிசங்கதான் வருவார். அதுவும் ப்ளட் கேன்சர் பேஷண்டா, சாவோடு போராடும் ரோல். ஆனால் அவர் கேட்டைத் திறந்துகிட்டு அறிமுகமாகும் அந்த ஸ்டைலும், அவரது பார்வையும் அப்பவே என்னை என்னவோ பண்ணிச்சு. அதுலேயே ஓரிரு நிமிசம் மட்டுமே வருகிற அவரது இளமைக்கால காட்சியில் ஸ்டைல் காட்டுவார். அதற்காகவே அந்தப் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்தோம்.

அவரது இரண்டாவது தமிழ்ப்படமான மூன்று முடிச்சி 22.10.1976ல் தான் வெளிவந்தது. ஆனால், பிப்ரவரியிலேயே (10.2.1976) ‘கவர்ச்சி வில்லன் ரஜினிகாந்த் ரசிகர்’ மன்றத்தைத் தொடங்கி விட்டோம். நாங்கள் மன்றம் ஆரம்பித்த விஷயத்தை அவருக்கு கடிதம் எழுதிட்டுத்தான் தொடங்கினோம். சில மாசங்கள் கழிச்சு அவரை நேரில் சந்திச்சபோ, ரொம்ப சங்கடப்பட்டார். “எம்ஜிஆர், சிவாஜி மாதிரியான பெரிய ஆட்கள் எல்லாம் இருக்காங்க. நான் சின்ன நடிகன். முதல்ல ஸ்டேன்ட் பண்ணணும். மன்றம் எல்லாம் வேண்டாம்” -ன்னுதான் சொன்னார். ஆனா அதை கண்டுக்காம எங்கள் ஆக்டிவிட்டியை தொடர்ந்தோம் .அடுத்து அவர் பைரவி படித்தில் ஹீரோவானதும், ஸ்டைல் ஹீரோ ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தைத் தொடங்கினோம். அப்போது ரஜினியோடு ரொம்ப நெருக்கமாக இருந்தோம்.

1978ல் மதுரை அலங்கார் தியேட்டர் அருகே சிவாஜி ரசிகர்களோடு ஏற்பட்ட மோதலில், எங்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தார்கள். என் அப்பா அம்மா இருவருமே இறந்துவிட்டதால், ரஜினிதான் எனக்குத் திருமணம் செய்துவைத்தார். அவரது வீட்டில், அவர் எடுத்துத் தந்த தாலியைத்தான் என் மனைவி லட்சுமியின் கழுத்தில் கட்டினேன்” அப்படீன்னெல்லாம் சொல்லி இருந்தார்

மேலும் 2020 செப்டம்பரில் முத்துமணி உடல் நலம் சரியில்லாம இருந்தப்போ ரஜினி போனில் பேசியது ட்ரெண்டிங் ஆனது நினைவுக் கூறத் தக்கது

Leave A Reply

Your email address will not be published.