32 ஆயிரம் அடி உயரத்தில்  சூர்யா பறக்கவிட்ட கடிதம்..

சூரரைப்போற்று ஒடிடியில் வெளியானது..

21

வாழ்நாள் திரைப்படமான அமேசானின் சூரரைப் போற்று வெளியீட்டை முன்னிட்டு ஒரு விசேஷ போஸ்டருடன் சூர்யா தனது ரசிகர்களை கவுரவித்தார்
‘சிம்ப்ளி ஃப்ளை’ என்ற புத்தகத்தின் கற்பனை வடிவ மான, மிகவும் எதிர்பார்க்கப் பட்ட அமேசான் ஒரிஜினல் திரைப்படமான சூரரை போற்று அமேசான் ப்ரைம் வீடியோவில் உலகம் முழு வதும் வெளியாகும் வேளை யில், ஒரு விசேஷ போஸ்டரை சூர்யா மிக உயரமான இடத் திலிருந்து வெளியிட்டார். ஓய்வுபெற்ற ராணுவ கேப்ட னும், ஒரு ரூபாய்க்கு விமான டிக்கெட் விற்பனை செய்த விமான நிறுவனமான ஏர் டெக்கான்

நிறுவனருமான கி.ஆர்.கோபிநாத்தின் வாழ்வைப் போலவே இப்படத்தின் நம்பிக்கையும் அற்புதமான உறுதியால் நிரப்பட்டு, சாத்தியமில்லா ததை சாத்தியமாக்கியுள்ளது. இதை முன்னெடுத்துக் கொண்டு செல்லும் வகையில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்துக்காக தங்கள் அன்பையும் ஆதரவையும் பொழிந்த சூர்யா ரசிகர்களுக்கு சமர்ப்பணமாக ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் அற்புதமான ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய பொழுதுபோக்குத் துறை வரலாற்றிலேயே முதன் முறையாக கடல் மட்டத்திலி ருந்து 34000 அடி உயரத்தில் -62°C தட்பவெப்பத்தில் இந்த போஸ்டர் வெளியிடப்பட் டுள்ளது. அதுமட்டுமின்றி, சமீபத்தில் சூர்யாவுடன் நடை பெற்ற ஒரு நிகழ்வின் மூலம் ரசிகர்களிடமிருந்து பெறப் பட்ட 58,000 கையெழுத்துகளி லிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10,000 கையெழுத்துகள் விண் வெளியில் வெளியிடப்பட்ட இந்த போஸ்டரில் இடம்பெற் றுள்ளன. தனது அன்பான ரசிகர்களுக்கு ஒரு கூடுதல் விசேஷ செய்தியுடன் கூடிய ஓரு தனித்துவமான வீடியோ வை சூர்யா பகிர்ந்துள்ளார். அவர் கூறும்போது, ‘வெளி யீட்டுக்கு முன்பாகவே இப்படத்துக்கு கிடைத்த அன்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கனவு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அதை சாதிப்பது சாத்தியமே என்பதையும், வானம் கூட எல்லை இல்லை என்பதையும் என் ரசிகர்கள் அனைவருக்கும் நினைவூட் டும் வகையில் சூரரைப் போற்று திரைப்படமும் இந்த சமர்ப்பணமும் இருக்க வேண் டும் என்று நான் விரும்புகி றேன். படத்தின் வெளியீட்டை யும், பார்வையாளர்களின் எதிர்வினைகளையும் நான் எதிர்பார்த்திருக்கிறேன்’ என்றார்.


ஒரு அச்சமற்ற புரட்சியாளரின் அசாதாரணமான சாதனை களுக்கு சிறகுகளை அளிக்கும் இந்த உணர்ச்சி நிறைந்த ஆக்‌ஷன் திரைப்படம் இந்த தீபாவளிக்கு வெளியாகி உள்ளது. சுதா கொங்காரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில், நிகேத் பொம்மி ஒளிப்பதிவில், சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ப்ரேஷ் ராவல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள் ளனர். இப்படத்தை 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் மற்றும் ராஜ்சேகர் கற்பூரசுந்தர பாண்டியன் (2டி) மற்றும் குணீத் மோங்காவின் ஷிக்யா எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித் துள்ளனர். அமேசான் ப்ரைம் வீடியோவில் 200க்கும் அதிக மான நாடுகள் மற்றும் பிரதே சங்களில் தமிழ்,தெலுங்கு, கன்னடம் மற்றும் மலை யாளம் ஆகிய மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.