கடாட்சம் படத்தின் போஸ்டரை வெளியிட்ட சுரேஷ் காமாட்சி

5

ஸ்ரீ சிவசக்திபிலிம்ஸ் சார்பில் ஷாமளா ரமேஷ் தயாரிப்பில் முற்றிலும் புதிய திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் பங்களிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கடாட்சம்’.

சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருக்கும் இந்த படத்தின் கதை, திரைக் கதை எழுதி இயக்கி யுள்ளார் இயக்குநர் பட்டுக்கோட்டை சிவா இந்தப்படம் ‘மரம்’ பற்றி பேசுகிறது.

கார்த்திக் சரண் கதாநாய கனாக நடிக்க, மஹானா கதாநாயகியாக நடித்தி ருக்கிறார் மேலும் பாக்ய ராஜ், நிழல்கள் ரவி, கஞ்சா கருப்பு, நல்லசிவா, பெஞ்சமின், ரக்சன் யாசர், அப்துல்கலாம், ஸ்டெல்லா, சத்யா, விஸ்வா, மைத்ரியா, முகிலன், விக்ரம், சாரதி, ஹரி, பிரியா மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.

இந்தபடத்திற்கு வரன்விஜே சார்லி என்பவர் இசையமைத் துள்ளார் உன்னிமேனன், கார்த்திக் ஆகியோர் படத்தின் பாடல்களை பாடியுள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு, கர்நாடகா என இரண்டு மாநிலங்களிலும் நடைபெற்றுள்ளது விரைவில் தமிழ், இந்தி, கன்னடம் என மூன்று மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது.

இந்தநிலையில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இன்று இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டு படக்குழுவின ருக்கு தனது வாழ்த்துக் களைப் தெரிவித்துள்ளார்.

 

இப்படத்தின் இசை வரன்விஜே சார்லி. ஒளிப்பதிவு கே.எஸ்.பழனி. படத்தொகுப்பு  அனு நடனம் டான்ஸ் செல்வி மக்கள் தொடர்பு A.ஜான்.

Leave A Reply

Your email address will not be published.