சூர்யா படத்துக்கு என் ஓ சி சான்று கிடைத்தது..

தயாரிப்பாளர் அறிவிப்பு..

16

சூர்யா நடிக்கும் படம் சூரரைப்போற்று. இப்படத்தை அக்டோபர் 30 ம் தேதி அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக் கப்பட்டது.
ஆனால் படம் வெளியிட என் ஓ சி (நோ அப்ஜெக்‌ஷன்) பிரச்னைகளால் பட ரிலீஸ் தள்ளி வைப்பதாக சூர்யா தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறும்போது, ‘சூரரைப் போற்று பிரம்மாண்ட அனுபவத்தை வார்த்தை களால் விளக்கி விட முடியாது. படத்தில் விமானப்படை சார்ந்த காட்சிகள் வருவது உங்கள் அனைவருக்கும் தெரி யும். அதனால் அது சம்பந்த மாக ஏராளமான நடைமுறை களும் அனுமதிகளும் பெற வேண்டி யிருந்தது. இப்படம் தேசிய பாதுகாப்பு பற்றி பேசுவதால் அது சம்பந்தமாக இந்திய விமானப்படையுடன் நாங்கள் தொடர்புகொண்டு அணுகி அவர்களது ஒத்து ழைப்பையும் பெற வேண்டி இருந்தது.


படம் வெளியிடுவதற்கு முன் அவர்களிடம் தடையின்மை சான்றிதழ் பெற வேண்டி இருப்பதால் பட வெளியீடு சற்றுத் தாமதம் ஆகிறது.இது வழக்கமான நடைமுறைதான்
வேறொன்றுமில்லை. கவலை வேண்டாம்’ என்றார்.
இந்நிலையில் சூரரைபோற்று படத்துக்கு என் ஓ சி கிடைத்து விட்டதாக பட தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் அறிவித்திருக்கிறார்.
’சூரரைப் போற்று’ பட ரிலீஸ் பற்றி விரைவில் அறிவிக்கபட உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.