சூர்யாவின் ’சூரரைப்போற்று’ ட்ரெய்லர் 50 லட்சம் வியூஸ் தாண்டியது

சாதனை தொடர்கிறது

17

சூர்யாவின்  ’சூரரைப் போற்று’ படம் நவம்பரில் வெளியாக உள்ளது. சுதா கொங்கரா இயக்கி உள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் இன்று காலை வெளியனது முதல் ட்ரெண்டிங்கில் இடம் பிடிக்க ஆரம்பித்தது.

ஏர் உழுபவன் விமானத்தில் பறப்பான், விமான டிக்கெட் விலை 1 ரூபாய் என சூர்யா பேசும் அதிரடி வசனங்கள். அவரை விமான நிறுவனம் தொடங்கவிடாமல் தடுக்கும் அதிகார வர்க்கம் என ட்ரெய்லர் தூள் பறக்கிறது, விமான தரையிறங்க அனுமதிக்காதபோது சாலையில் விமானத்தை இறக்கும் ஆக்ரோஷம் என சூர்யாவின் அசத்தலான காட்சிகளுடன் டிரெய்லர் பரபரக்கிறது. மேலும் அதனை ரசிகர்கள் ட்ரெண்டிங்கில் இடம் பிடிக்க செய்திருக்கின்றனர்.

தற்போது 5 மில்லியன் வியூஸ் அதாவது 50 லட்சம்பேரால் பார்க்கபபட்டு   சாதனை படைத்திருக்கிறது  மேலும் வியூஸ் தொடர்ந்த வண்ணமிருக்கிறது.

சூரரைப் போற்று பட ரிலீஸ் நவம்பர் 12ம்  தேதி அமேசான் பிரைமில் தீபாவளிக்கு அட்வான்ஸ் விருந்தாக வெளியாகும்  என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

Leave A Reply

Your email address will not be published.