பிரபாஸ் பிறந்தநாளான அக்டோபர் 23ம் தேதி ரசிகர்களுக்கு சூப்பர் கிஃப்ட்..

13

நவராத்ரி தொடங்கிய சந்தோஷத்டன் பாகுபலி பிரபாஸுக்கு வரும் அக்டோ பர் 23 அன்று பிறந்தநாள் கொண்டாட்டத்தை அவர் ஹீரோவாக நடித்து வரும் ராதே ஷ்யாம் படக் குழு கொண்டாடுகிறது. அன்றைய தினம் ரசிகர்களுக்கு சூப்பர் கிஃப்ட் தர ’ராதே ஷ்யாம்’ படக் குழு சிறப்பு அறிவிப் பை வெளியிட திட்டமிட்டுள் ளனர்.
பத்திரிகையாளர்கள் மத்தியில் தயாரிப்பாளர்கள் ஒரு போஸ் டரை பகிர்ந்துள்ளனர், அதில் “CAPTION AND LINK” என்று எழுதப்பட்ட ஒரு விஷேச அறிவிப்பு இடம்பெற் றுள்ளது.
பிரம்மாண்ட படைப்பான ‘ராதே ஷ்யாம்’ திரைப்படம் ஐரோப்பாவில் நடக்கும் ஒரு காதல் காவியம். இப்படத்தில் அகில இந்திய நட்சத்திரமான பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக் டே பிரதான கதாபாத்திரங் களில் நடிக்கின்றனர். பூஜா ஹெஜ்டேவின் பிறந்த நாளன்று அவரது ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர்.


இப்படத்தில் சச்சின் கடேகர், பாக்யஸ்ரீ, ப்ரியதர்ஷினி, முரளி ஷர்மா, சாஷா சேட்ரி மற்றும் குணால் ராய் கபூர் உள்ளிட் டோர் நடிக்கின்றனர். இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளி யாகவுள்ளது.
கோரோனா அச்சுறுத்தால் நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. சமீப மாக, இந்த மாத தொடக்கத் தில் படக்குழுவினர் படப் பிடிப்பை மீண்டும் தொடங்கி னர். இந்த செய்தியை நடிகர் களும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்தனர். ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் ரொமாண்டிக் பீரியட் ட்ராமா வாக உருவாகும் இந்த பன்மொழி திரைப்படம் 2021-ம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பன்மொழி திரைப்படமான ‘ராதே ஷ்யாம்’ திரைப்படத் தை ராதா கிருஷ்ண குமார் இயக்க, யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வம்சி மற்றும் ப்ரமோத் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.