சென்னை சுயாதீன திரைப்பட விழா

பிப்ரவரி 6,7 நடக்கிறது..

14

இந்தியாவிலேயே மக்களிடம் நிதி திரட்டப்பட்டு தொடர்ச்சியாக சுயாதீன திரைப்படங்களுக்கான களமாக செயல்பட்டு வரும் சென்னை சுயாதீன திரைப்பட விழா இந்த ஆண்டும் திரையரங்கில் நடைபெற உள்ளது.

உலகம் முழுக்க பெரும்பாலான அரசு அமைப்பு சார் திரைப்பட விழாக்களே ஆன்லைனில் நடைபெறும்போது தமிழ் ஸ்டுடியோ சென்னை சுயாதீன திரைப்பட விழாவை அரசு கோவிட் வழிகாட்டு நெறிமுறையின்படி நடத்தவிருக்கிறது. எல்லா ஆண்டுகளும் மிக பிரம்மாண்டமாக நடைபெறும் விழா இந்த ஆண்டு எளிமையாக ஆனால் அதே தீவிரத்தோடு வேறு எங்கும் பார்க்க முடியாத பல புதிய முயற்சிகளை உள்ளடக்கிய படங்களையும் திரையிட இருக்கிறது. இத்தகைய படங்கள் சென்னை சுயாதீன திரைப்பட விழாவில் மட்டுமே பார்க்க கிடைக்கும்.

இந்த ஆண்டு இரண்டு நாள் ஆனால் ஒரே ஒரு திரையரங்கில் மட்டுமே விழா நடைபெற உள்ளது. ஆதலால் அதிகபட்சம் 300 பேர் வரை மட்டுமே அனுமதிக்க இயலும். கோவிட் பெருந்தொற்று ஏற்பட்டு உலகம் முழுக்க பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும் தமிழ் ஸ்டுடியோ தொடர்ச்சியாக களத்தில் செயல்பட்டு வருகிறது. 15 க்கும் மேற்பட்ட படங்கள், இரண்டு மாஸ்டர் கிளாஸ், கலந்துரையாடல் என எல்லாவற்றுக்கும் சேர்த்து 50 ரூபாய் மட்டுமே அனுமதிக்கட்டணமாக இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய படங்களை உதவி இயக்குநர்கள், உதவி தொழில்நுட்ப கலைஞர்கள், மாணவர்கள் அனைவரும் பார்க்க ஏதுவாக மிக குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இறுதி வரை காத்திருந்த பின்னர் பங்கேற்கலாம் என்று பொறுத்திருந்தால் இந்த ஆண்டு சென்னை சுயாதீன திரைப்பட விழாவில் நீங்கள் பங்கேற்கவே முடியாது. உடனே நுழைவுக்கட்டணம் செலுத்தி பதிவு செய்துக்கொள்ளுங்கள்.

சென்ற ஆண்டு பதிவு செய்தவதர்கள் எண்ணிக்கை 1500, இந்த ஆண்டு 300 பேர் மட்டுமே என்பதால் விரைவாக பணம் செலுத்தி பதிவு செய்துக்கொள்ளூங்கள். எல்லா ஆண்டும் போல இறுதி நேரத்தில் வந்து நின்றுக்கொண்டாவது பார்த்துக்கொள்கிறோம் என்று இந்த ஆண்டு சொன்னால் நிச்சயம் இடம் கிடைக்காது. எனவே உடனடியாக பணம் செலுத்தி முன்பதிவு செய்துக்கொள்ளுங்கள். இன்னமும் வெளியிடங்களில் இதற்கான ப்ரோமசன் தொடங்கவில்லை. விரைவில் அதுவும் தொடங்கினால் இருக்கைகள் கிடைக்காது. தீவிர சினிமா ஆர்வலர்கள் உடனடியாக பதிவு செய்துவிடுங்கள். தொடர்புக்கு:9840644916

Leave A Reply

Your email address will not be published.