எஸ்.வி. ரங்காராவ் காலமான தினம்

1

குண சித்திர நடிகர். ரங்கராவ் (S. V. Ranga Rao)
நினைவு தினம்.

ஆந்திர மாநிலத்தில் பிறந்த இவர் நடிகராக மட்டுமல்லாது திரைப்பட வுலகில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் பங்காற்றியவர்.
தமது இளமைக் காலங் களிலேயே முதியவர் வேடங்களை ஏற்று நடித்த பெருமைக்குரியவர்.
திரைப்படங்களில் 25 ஆண்டுகள் (1950-களில்,1960-களில்,1970-களின்முன்பகுதியில் ) வயதான, முதிய கதாபாத் திரங்களை நிறைய செய்திருக்கிறார் என்பது விந்தை. எழுபது வயது மனிதராக சினிமா காட்டிய எஸ்.வி. ரங்காராவ் அறுபது வயதைத் தன் வாழ்நாளில் கண்ட தில்லை.1974-ல் அவர் மறைந்தபோது அவர் வயது 56தான்.
தெலுங்கு, தமிழ்ப் படங்களில் நடித்தவர். நாடகங்களில் நடித்திருந் தாலும், திரைப்படங்களில் புராண கதாபாத்திரங் களில் நடித்திருந்தாலும் கூட நாடக செயற்கைத் தனம் இல்லாமல் ரொம்ப இயல்பாக நடித்து அளப்பரிய சாதனை செய்தார்.
ஆஜானுபாகுவான ரங்காராவ் திரைப்படங் களில் அப்பா வேடத்துக்கே தனி கவுரவத்தை ஏற்படுத் தியவர் ‘பக்த பிரகலாதா’, ‘நம் நாடு’ போன்ற படங் களில் அவர் ஏற்ற வில்லன் வேடங்கள் பார்ப்பவர்கள் வயிற்றைக  கலக்கும். ‘மாயா பஜார்’ படத்தில் கடோத்கஜனாக ‘கல்யாண சமையல் சாதம்’ பாடலில் ரங்காராவின் நடிப்பு பிரபலம். ‘.

Leave A Reply

Your email address will not be published.