சிவகுமாரின் சபதம் (திரைப்பட விமர்சனம்)

12

படம்: சிவகுமாரின் சபதம்

நடிப்பு: ஹிப் ஹாப் தமிழா,மாதுரி, இளங்கோ குமணன், ஆதித்யா கதிர், பிராங்க் ராகுல், பார்வதி, விஜய் கார்த்திக், ரஞ்சனா நாச்சியார், கோபால், மனோஜ், ஜூனியர் சக்தி, ராகுல், அண்ணாமலை.

இசை: ஹிப்ஹாப் தமிழா

ஒளிப்பதிவு: அர்ஹூன் ராஜா

தயாரிப்பு:ஹிப்ஹாப் தமிழா, செந்தில் தியாகராஜன், அர்ஜூன் தியாகராஜன்

இயக்கம்: ஹிப் ஹாப் தமிழா

காஞ்சிபுரத்தில் அந்தகாலத்தில் மன்னர் குடும்பங்களுக்கு ராஜபட்டு நெய்து தரும் பாரம்பரியம்மிக்கது வரதராஜனின் குடும்பம்.மன்னர் முறை ஒழிந்த நிலையில் வருமானம் குறைந்துபோக நண்பருக்காக பட்டு நெய்து தர சம்மதித்து ஒப்பந்தம் போடுகிறார். சில வருடங்களில் இதில் பிரச்னை ஏற்படுகிறது. கோபமடைந்த வரதராஜன், இனி தறி ஏறுவதில்லை என்று சபதம் செய்கி றார். தறி வீட்டையும் இழுத்து பூட்டுகிறார். இதனால் வருமானம் இல்லாமல் குடும்பம் கஷ்டப்படுகிறது. வரதராஜனின் பேரன் சிவகுமார் வளர்ந்து குடும்பத்தை நல்லவழியில் கொண்டு வர பல வேலைகளை செய்கிறான். அவனை தொழில் அதிபரிடம் சேர்த்துவிடுகிறார் அவரது சித்தப்பா. தொழில் அதிபர் மகளுடன் சிவகுமாருக்கு காதல் மலர்கிறது. இதில் எழும் சிக்கல் குடும்ப பிரச்னையாக வெடித்து கலவரமாகிறது.ஏழையான சிவகுமாருக்கு மகளை கட்டித்தரமாட்டேன் என்று சொல்கிறார் தொழில் அதிபர். அதைக்கேட்டு கோபம் அடையும் சிவகுமார், தான் பெரிய ஆளாக வளர்ந்து அவரது மகளை கட்டுவதாக கூறுகிறார். இந்த சிக்கல் எங்கு சென்று முடிகிறது என்பதை சிவகுமாரின் சபதம் கலகலப்பாக விளக்குகிறது.

இளைஞர்களை மட்டுமல்லாமல் குடும்பங்களையும் கவர வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படியொரு குடும்ப சென்டிமென்ட் கதையை ஹிப் ஹாப் தமிழா கையில் எடுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. அவரது முயற்சிக்கு வெற்றியும் கிடைத்திருக் கிறது. சென்டிமென்ட் பாதி, கலகலப்பு பாதி என்று சரிசம விகிதத்தில் கதையை கலந்தடித்திருக்கிறார்.
ஹீரோயின் மாதுரியிடம் காதல் கலாட்டாவில் ஈடுபட்டு அவரை கலாய்த்து பின்னர் காதல் சிறகை விரிப்பது கலகலப்பான எபிசோடாக படமாகி இருக்கிறது. புதுவரவு மாதுரியும் நடிப்பில் சறுக்கிவிடாமல் பாஸ்மார்க் பெற்றுவிடுகிறார்.
தனது தாத்தாவின் பாரம்பரிய பெருமையை உணர்ந்து அவரது பெயரை காப்பாற்றும் வகையில் தொழில் ரீதியாக மீண்டும் ராஜபட்டு நெசவு செய்ய எடுக்கும் ஹிப் ஹாப் தமிழா முயற்சிகள் கதையின் கருவுக்கு வலு சேர்க்கிறது.
இனி ராஜபட்டு நெய்ய மாட்டேன் என்று சபதம் செய்து தறிவீட்டை இழுத்து மூடிய தாதா வரதராஜனின் (இளங்கோ குமணன்)சபதத்தை திரும்ப பெற்று மீண்டும் பாரம்பரிய நெசவை தொடங்க ஹிப்ஹாப் தமிழா பேசும் வசனங்கள் உயிரோட்டம் நிறைந்தது.

ஹிப்ஹாப் தமிழாவின் நண்பரக வரும் ஆதித்யா கதிர் செய்யும் சேட்டைகளும் பிராங்க் ராகுல் செய்யும் அடாவடிகளும் குபீர் சிரிப்பை வரவழைக்கிறது.

தொழில் அதிபர் சந்திரசேகராக நடித்திருக்கும் விஜய் கார்த்திக் நீண்ட வருடங்களுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.வில்லத்தனமும், குடும்பபொறுப்பும் இரண்டையும் கலந்து நடித்திருக்கும் அவரை இனி வரும் நாட்களில் அடிக்கடி திரையில் பார்க்கலாம்.

சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி.தியாக ராஜன் வழங்க ஹிப் ஹாப் தமிழா,செந்தில் தியாகராஜன், அர்ஜூன் தியாகராஜன் படத்தை தயாரித்திருக்கின்றனர்.

கதை, திரைக்கதை வசனம், பாடல்கள், இயக்கம் ஆகிய பொறுப்புக்களையும் ஹிப் ஹாப் தமிழாவே ஏற்று நிறைவான குடும்ப படமொன்றை தந்திருக்கிறார்.
அர்ஜூன் ராஜா ஒளிப்பதிவு திகட்டாத தெளிவு.

சிவகுமாரின் சபதம்-குடும்பத்துடன் அமர்ந்து

Leave A Reply

Your email address will not be published.