டி.ஆர். ராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று

16

கரூர் மாவட்டம், திருக்காம்புலியூர் கிராமத்தில், 1917 ஜனவரி 9ல் பிறந்தவர் டி.ஆர்.ராமச்சந்திரன். படிப்பில் ஆர்வமில்லாததால், சிறு வயதிலேயே, ‘பாலமோகன ரஞ்சித சங்கீத சபா’ நாடக குழுவில் இணைந்து நடித்தார்.

மேலும் சில   நாடக குழுக்களில் சேர்ந்து நடித்தவருக்கு, சினிமா வாய்ப்பு கிடைத்தது. 1938ல் வெளியான, நந்தகுமார் படத்தில், டி.ஆர். மகாலிங்கத்திற்கு நண்பனாக நடித்தார்.

சபாபதி எனும் முழு நீள நகைச்சுவை படத்தில், கதாநாயகனாக நடித்தார்; படம் சூப்பர் ஹிட் ஆனது. இதைத் தொடர்ந்து, 150க்கும் மேற்பட்ட படங்களில், கதாநாயகன், குணசித்திரம், துணை வேடங்களில் நடித்தார். முட்டாள்தனம், புத்திசாலி, குறும்பு, அப்பாவி, வெட்கம் கலந்த காதல் உணர்ச்சி என கலவையான உடல் மொழிக்குச் சொந்தக்காரர். 1990 நவம்பர் 30ல், 73வது வயதில் காலமானார்.

பழம்பெரும் நடிகர்,  டி.ஆர். ராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று!

Leave A Reply

Your email address will not be published.