தமிழ் என்னை வளர்த்தது – எம்ஜிஆர்

8

ஒவ்வொருவருக்கும் அவரது தாயின் மொழியே அவருக்கும் உரிமையான மொழியாகும். எனது தாய் கேரளத்தைச் சேர்ந்தவர். அவர் பேசிய மொழி மலையாளம். அப்படியானால் நான் பேசவேண்டிய மொழியும் அந்த மலையாள மொழியாகத்தான் இருக்க வேண்டும்? என்னை பொறுத்தவரை ஒரு விசித்திரமான நிலைமை. எனது காதுகள் புரிந்து கொள்ளும் சக்தியைப் பெற்றபோது கேட்ட ஒலி தமிழின் ஒலி ஆகும். என் கண்கள் முதன் முதலில் பார்க்கவும், படிக்கவும் வாய்த்த எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களே.

என்னை சுற்றியிருந்த பழக்க வழக்கங்கள் எனக்கு சொன்னவை எல்லாம் தமிழ் பண்பாட்டின் நிழல் ஆட்டங்களைத் தான். பண்பாட்டு தமிழ், எழுத்துத் தமிழ், பேச்சுத் தமிழ் இப்படி எங்கு பார்த்தாலும், கேட்டாலும், படித்தாலும், பேசினாலும் தமிழ்தான். வாழும் முறையில் கூட தமிழ், தமிழ் என்ற நிலைமைக்குள், வட்டத்துக்குள், முட்டைக்குள் குஞ்சாக இருந்தேன்.

வெளியில் வந்த பிறகும் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று இருக்கிற நிலையில் தான் வளர்ந்தேன். இத்தகைய சூழலில் நான் எப்படி வளர்ந்து இருப்பேன் என்று சொல்லிக் கொள்ளத்தான் வேண்டுமா?

நான் தமிழ் பாடல்களை கேட்டு மனம் பூரித்து அந்த கவிதை நயத்தை பற்றி திறனாய்வு செய்து மகிழ்வேன். ஆனால் மலையாள மொழியில் பாண்டித்தியம் (புலமை) இல்லை.

Leave A Reply

Your email address will not be published.