பெப்சி தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது!

0

கோலிவுட் என்றழைக்கப்படும் நம் தமிழ்த் திரையுலகத்தில் பணியாற்றி வரும் திரைப்படத் தொழிலாளர்களின் சம்பளம் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்ணயிக்கப் படுவது வழக்கம். ஆனால் எதிர்பாராத பல சம்பவங்களினால் கடந்த 7 ஆண்டுகளாக சம்பள உயர்வு வழங்கப்படாமல் திரைப்பட தொழிலாளர்கள் அவதிப்பட்டு வந்தனர்.

கடந்தாண்டு பொறுப்புக்கு வந்த தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், புதிதாக உருவான தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கமும் இணைந்து தொழிலாளர் சம்மேளனத்துடன் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பற்றி பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவித்தன.

இதையடுத்து கடந்த சில நாட்களாக தினமும் ஒரு சங்கத்தை அழைத்து அவர்களது ஊதிய உயர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அவர்களுக்கான சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.

இதன்படி பெப்சியில் அங்கம் வகிக்கும் 23 சங்கங்களின் ஊதிய உயர்வும் பேசி முடிக்கப்பட்டுவிட்டதால் இதற்கான முறைப்படியான ஒப்பந்தம் பெப்சி அமைப்புக்கும், தயாரிப்பாளர்கள் சங்கத்தினருக்கும் இடையில் நேற்றைக்கு கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம் நேற்று மார்ச் 10, 2022 முதல் மார்ச் 9, 2025-ம் ஆண்டுவரையிலும் செல்லுபடியாகும்.

Leave A Reply

Your email address will not be published.