“நாற்காலி” படத்தின் ஒரு பாடலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட உள்ளார்

18

இயக்குனர் அமீர் நடிப்பில் வி இசட் துரை இயக்கியுள்ள நாற்காலி படத்தின் ஒரு பாடலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட உள்ளார்.

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக உருவான அமீர் ஆதிபகவன் படத்தின் தோல்விக்குப் பிறகு அதிகமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். வடசென்னை படத்தில் அவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதையடுத்து அடுத்ததாக நாற்காலி என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அரசியல் கதைக்களம் கொண்ட படமாக உருவாகி வரும் நாற்காலி படத்தை முகவரி, தொட்டி ஜெயா ஆகிய படங்களை இயக்கிய வி. இசட். துரை இயக்கியுள்ளார். நீண்ட காலமாக நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து படத்தின் புதிய போஸடரை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த படமானது எம் ஜி ஆருக்கு மக்கள் மத்தியில் உள்ள புகழை மையப்படுத்தி உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. அதை மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமண்யம் பாடியுள்ளார். இந்நிலையில் இந்த பாடலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.