முதல்வருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நன்றி

1

 

படப்பிடிப்பு தொடங்க அனுமதி கொடுத்த தமிழக முதல்வருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பா ளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப் பாளர்கள் சங்கம் சார்பில் தலைவர் என்.இராமசாமி என்கிற முரளி இராம நாராயணன் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள் ளார். அதில் கூறியதாவது:

கொரோனாவின் கோரப் பிடியிலிருந்து மக்களை காப்பாற்ற அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து செயல்பட்டு வருவது எல்லோருக்கும் தெரியும். இந்த சூழ்நிலையில் தமிழ் திரைப்படங்களின் படப் பிடிப்பு மற்றும் படத்திற்கு பிந்தைய வேலைகளை துவக்குவது உட்பட பல்வேறு கோரிக்கை களை வைத்து திரை உலகை காப்பாற்ற வேண்டி தமிழக முதல்வரிடம் தயாரிப்பா ளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைத்து மனு கொடுத்தோம்.

அதன் முதல்படியாக தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின், இன்று 100 நபர்களுக்குள் குழுவி னரை வைத்து படப்பிடிப்பு துவக்கலாம். படப்பிடிப் பிற்கு பிந்தைய வேலை களையும் நடத்தலாம்” என ஆணை பிறப்பித்துள்ளார்.
தமிழக முதல்வருக்கு எங்களது கோடானுகோடி நன்றிகள்.

தமிழக அரசு அறிவித் துள்ள சமூக இடைவெளி யை கடைபிடித்து சானிடைசரை உபயோகப் படுத்தி தடுப்பூசி போட்டுக் கொண்டு படப்பிடிப்பு களை நடத்திட வேண்டு மாய் தயாரிப்பாளர் களையும் படக்குழுவின ரையும் கேட்டுக்கொள்கி றோம்.மற்ற கோரிக்கை களையும் தமிழக முதல்வர் நிறைவேற்றித்தருவார் என்ற நம்பிக்கையோடு மீண்டும் படப்பிடிப்புகளை நம்பிக்கையோடு துவக்கு வோம்.
இவ்வாறு என்.இராமசாமி என்கிற முரளி இராமநாரா யணன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.