டி.ராஜேந்தர் தலைமையில் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளகள் சங்கம் அறிமுக விழா

22

இயக்குனர். தயாரிப்பாளர்  டி.ராஜேந்தர் தலைமையில் உருவான தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கத்தின் அறிமுக விழா இன்று (5th Dec) நடைபெற்றது.

சங்க தலைவராக டி.ராஜேந்தர் பொறுப்பேற்றார். செயலாளர்களாக என். சுபாஷ் சந்திர போஸ், ஜே.,எஸ்.கே. சதிஷ் குமார்
பொருளாளராக கே .ராஜன். துணை தலைவர்களாக பி.டி. செல்வ குமார்
ஆர். சிங்கார வடிவேலன், இணை செயலாளர்களாக  கே.ஜி. பாண்டியன்
இணை செயலாளர்களாக எம் அசோக் சாம்ராஜ், சிகரம்.R.சந்திர சேகர் ஆகியோர் நியமனம் ஆனார்கள்.

சங்க செயல்பாடுகள் :

1. புதிய, சிறிய படத்தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்தி உருவாக்க நினைக்கிறோம்

2. VPF போன்ற கட்டணங்களை நீக்கி, வேண்டாத செலவீனங்களை தவீர்த்து, குறைந்த முதலீட்டில் படமெடுக்க உறுதுணையாக இருப்போம்.

3. திரையரங்குகளில் வெளியிட முடியாமல், சிக்கி தவிக்கும் சிறு பட தயாரிப்பாளர்களின் படங்களை திரையிடுவதற்கு, புதிய, உரிய வழி காட்டுவோம்.

4. F.M.S, சாட்டிலைட், O.T.T. மற்றும் கேபிள் டி.வி வியாபாரத்தை பெருக்கி லாபம் ஓட்ட முயற்சி மேற்கொள்வோம்.

5. பட வெளியீட்டின் போது ஏற்படும் பல வித சிக்கல்களை, இயன்றவரை சுமுகமாக பேசி தீர்க்க ஆவண செய்வோம்.

தஞ்சை சினி ஆர்ட்ஸ் உரிமையாளரான  உஷா ராஜேந்தர், STR பிக்சர்ஸ் உரிமையாளரான நடிகர் சிலம்பரசன் உள்ளிட்ட பலர் இந்த சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.