விவசாயியாக தாடி பாலாஜி

20

இயக்குனர் ஜே அம்பி இயக்கிய ‘மிடி’ என்னும் குறும்படத்தில், நடிகர் தாடி பாலாஜி, ஷியாமளா ஆகியோர் விவசாயிகளாக நடித்துள்ளனர். ரெட் வுட்ஸ் மீடியா தயாரித்துள்ளது.

குறும் படம் குறித்து இயக்குனர் கூறியது: ஏழை விவசாய தம்பதிகள் மரணத்தை, விவசாயிகளின் வலியை இந்த குறும்படம் பேசுகிறது. சென்னைக்குப் பக்கத்தில் ஒரு கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தினோம்.

காமெடி வேடங்களில் நடித்த தாடி பாலாஜி முதல் முறையாக சீரியஸான வேடத்தில் நடித்திருக்கிறார். ‘மிடி’ என்றால் வறுமை என அர்த்தம் மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் மகேந்திரன் குறும்படத்தை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார்.

இவ்வாறு வில்சன் ஜே அம்பி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.