ஜூன் 21ல் தளபதி 65 பர்ஸ்ட் லுக்

1

மாஸ்டர் படத்தை அடுத்து நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய். நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்து முடிந்தது. கொரோனா பிரச்னையால் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தடைப்பட்டுள்ளது. இன்னும் பெயரிடப்பட்டாத இப்படத்தை தற்காலிகமாக ‛தளபதி65′ என குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜூன் 22ல் விஜய் பிறந்தநாள் வருவதால் அதற்கு முதல்நாள் ஜூன் 21ல் மாலை 6 மணிக்கு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதை விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். அதோடு விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக ஊடகங்களில் விஜய்யின் காமன் டிபி பலவற்றையும் ரசிகர்கள் உருவாக்கி அதை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.