’தேன்’ படம் இந்தியன் பனோராமாவில் திரையிட தேர்வு..

17

 

தருண்குமார், அபர்ணிதி, அனுஸ்ரீ. பாவா லட்சுணன் நடித்த படம் தேன். ட்ரைடண்ட் ஆர்ட் ரவீந்திரன், அம்பலவாணன், பிரேமா தயாரித்திருந்தனர்.  சனத் பரத்வாஜ் இசை அமைத்திருந்தார். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். கணேஷ் விநாயகன் இயக்கி இருந்தார். சர்வதேச அளவில் இப்படம் பல விருதுகளை தட்டி வந்தது. தற்போஉது சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்க தேர்வாகி இருக்கிறது. இதுகுறித்து இயக்குனர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

ஊடகத்துறை, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையதள நண்பர்களுக்கு வணக்கம். பல்வேறு காலகட்டங்களில் என்னை ஊக்கப் படுத்திய பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையதள நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இயக்கியிருக்கும் தேன் திரைப்படத்தை பத்திரிக்கையாளர்கள் சிறப்பு காட்சியில் பார்த்து ரசித்த அனைத்து ஊடக, பத்திரிக்கை, வானொலி,

இணையதள நண்பர்களுக்கு என் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எனது தேன் திரைப்படம் பல சர்வதேச விருதுகளை பெற்று வரும் வேளையில் கூடுதலாக 51வது சர்வதேச இந்தியன் பனோரமா விருதிற்கு தேர்வாகி உள்ளது என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாஏஉ இயக்குனர் கணேஷ் விநாயகன் கூறி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.