கௌதம் கார்த்திக்கின் சிப்பாய் தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்

2

கௌதம் கார்த்திக்கின் சிப்பாய் திரைப்படம் RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார்

நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் உருவாகிவரும் படம் “சிப்பாய்”.இத்திரைப்படத்தை இயக்குநர் சண்முக சரவணன் இயக்கியுள்ளார் இவர் சிம்புவின் “சிலம்பாட்டம்” படத்தை இயக்கியவர். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். RSSS தணிகைவேல் தயாரித்து வெளியிடுகிறார். சிப்பாய் திரைப்படம் 80% படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கொரோனா பேரிடர் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது . இப்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கி முழு வேகத்தில் நடைபெறவிற்கிறது .விரைவில் இத்திரைப்படம் வெளியிட்டு தயாராக உள்ளது.இத்திரைபடத்தை தயாரிக்கும் RSSS தணிகைவேல் 17 சர்வதேச விருதுகள் பெற்ற “ஒற்றை பனை மரம்”
படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடதக்கது.
இவர், இதற்குமுன் நேற்று இன்று, இரவும் பகலும் வரும், போக்கிரி மன்னன் ஆகிய படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.